தட தோள் - (தேவரீரது) நான்குபெரியதோள்களையும், வீசி ஆடும் - வீசிக் கொண்டு கூத்தாடுவதற்கு உரியதான, பிணைந்து - (பலமங்கையரோடு) சேர்ந்து, குரவைதனை ஆடும் - குரவைக்கூத்தை ஆடுகின்ற, கோள்அறுஆட்டும் - குற்றமற்ற ஆட்டத்தையும், - மன்றின் ஊடு உவந்து ஆடும் - (பலர்கூடும்) பொது விடத்தில் மனமகிழ்ந்து ஆடுகின்ற, மரக்கால் ஆட்டும் - மரக்கால்கூத்தையும், - வலி அரவில் பாய்ந்து ஆடும் - வலிமையையுடைய (காளியனென்னும்) பாம்பின்மீது தாவியாடின, வடு இல் ஆட்டும் - குற்றமற்ற நர்த்தனத்தையும், அன்று - அவ்வவ்வாடல்கள் நடந்த காலங்களில், காணா (து) - தரிசிக்கப் பெறாமல், இழந்த -, அடியோம் - அடியோங்கள், காண - (இன்று) தரிசிக்கும்படி, ஊசல் ஆடிர்-; (எ - று.) முன்பு தேவரீர் பலஆடல்களை ஆடியுள்ளீர்; அவ்வாறு ஆடிய ஆடல்களை அவ்வக்காலத்தில் தரிசிக்கப்பெறாத அடியோங்களது குறை தீருமாறு இன்று ஊசலாடவேண்டு மென்பதாம். "மரக்காலாட்டு' என்பது, பதினோ ராடலுள் ஒன்று. "கோளராட்டு' என்ற பாடத்துக்கு - (மாதரிடத்துப்) பற்றுள்ளவர் ஆடுகின்ற குரவைக்கூத்தை என்றும், "வடிவு இல் ஆட்டு' என்ற பாடத்திற்கு - குறைதலில்லாமல் தொடர்ச்சியாக ஆடுகின்ற கூத்தை என்றும் பொருள்கூறுவர். "[மடுவிலாட்டும்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 25. | ஆரணங்களொருநான்குமன்பர்நெஞ்சு | | மணிசிலம்புமடி விடாதூசலாட | | வாரணங்குமுலைமடவார்கண் ணும்வண்டும் | | வண்டுளவும்புயம்விடாதூசலாடக் | | காரணங்களாயண்டரண்டமெல்லாங் | | கமலநாபியிற்படைத்துக்காத்தழிக்குஞ் | | சீரணங்குமணவாளராடிரூசல் | | சீரங்கநாயகனாராடிரூசல். | (இ - ள்.) காரணங்கள் ஆய் - மூவகைக்காரணங்களுமாகி, அணடர் - அண்டங்களிலிருப்பவர்களும், அண்டம் - உலகவுருண்டைகளும், எல்லாம் - ஆகிய எல்லாவற்றையும், கமலம் நாபியில் படைத்து - திருவுந்தித்தாமரையிற் சிருஷ்டித்து, காத்து - பாதுகாத்து, அழிக்கும் - (பிரளயகாலத்தில்) ஸம்ஹாரஞ்செய்கின்ற, சீர் அணங்கு மணவாளர் - சிறப்புப்பொருந்திய தெய்வமகளாகிய இலக்குமிக்குக் கணவரே! - ஆரணங்கள் ஒரு நான்கும் - நான்குவேதங்களும், அன்பர் நெஞ்சும் - அடியார்களது மனமும், அணி சிலம்பும் - அழகிய சிலம்புகளும், அடி விடாது - (தேவரீரது) திருவடிகளை விடாமலிருந்து, ஊசல் ஆட - ஊசலாடவும், - வார் அணங்கு முலை மடவார் கண்ணும் - (தமது சம்பந்தத்தாற்) கச்சு நிறம்பெறும்படியான (தம்மீது அணியப்பெறுதலாலே கச்சுக்கு அழகையுண்டாக்குகிற) தனங்களையுடைய இளமகளிரது கண்களும், வண்டும் - வண்டுகளும், வள் துளவும் - வளப்பமான திருத்துழாய்மாலையும், புயம் விடாது - திருத்தோள்களை விடாமலி |