பக்கம் எண் :

894சீரங்கநாயகரூசல்

ருந்து, ஊசல் ஆட - ஊசலாடவும், ஊசல் ஆடிர் -! சீரங்கநாயகனார் - ஸ்ரீரங்க நாதரே! ஊசல் ஆடிர் -; (எ - று.)

வேதங்கள்நான்கும் அடிவிடாதிருத்தலாவது - நான்குவேதங்களும் எம்பெருமானது ஸ்வரூபத்தையே நாடிச்சொல்லுதலாம். திருவடியைச் சொன்னது - திருமேனிக்கும் உபலக்ஷணம். ஸேஷபூதர் (அடியவர்) இழியுந்துறை ஸேஷியின் (தலைவனது) திருவடியே யாதலால், அன்பர்நெஞ்சு அந்தப்பரமனது திருவடியை விடாது பற்றுவதாயிற்று. அணிசிலம்பு - அப்பெருமானது திருவடியி லணியப்பெற்ற அழகிய பாததண்டைகள். இளமகளிர் எம்பெருமானதுதோளழகில் ஈடுபட்டு அவற்றையே கண்டுகொண்டு நிற்றலால், மடவார் கண் ஊசலாடும்புய மென்றார். வண்டு - திருத்துழாய் மலர்மாலையில் மொய்த்தற்காக வந்த வண்டு என்றாவது, தலைமகளிரால் தூதுவிடப்பட்ட வண்டு என்றாவது கொள்க. சீரணங்குமணவாளர் என்பதற்கு - தமதுகுணங்களால் (யாவரையும்) விரும்பும்படி செய்கின்ற அழகிய மணவாளரே! என்றும் பொருளுரைக்கலாம்.

காரணங்கள் மூன்றுவகைப்படும்; அவையாவன - முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என்பன. முதற்காரணமாவது - பானையுண் டாவதற்கு மண்போல உபாதானமாயிருப்பது; துணைக்காரணமாவது - அப்பானையுண்டாவதற்குத் தண்டசக்கரங்கள்போல ஸஹகாரியாயிருப்பது; நிமித்தகாரணமாவது - அப்பானையுண்டாவதற்குக் குயவன் போல நிமித்த மாயிருப்பது: இவ்வாறே ஸ்தூலமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய இவ்வுலகம் உண்டாவதற்குப் பரப்பிரமம் மூன்று காரணமாயும் இருக்குமென்றும், அவற்றுள் ஸூக்ஷ்மமான சித் அசித் என்ற இவற்றுடன் கூடிய பிரமம் முதற்காரணமா மென்றும், ஜ்ஞாநம் சக்தி முதலிய குணங்களுடன் கூடிய பிரமம் துணைக்காரணமா மென்றும், "பஹுஸ்யாம் (பகுவாக ஆகக்கடவேன்)" என்ற ஸங்கல்பத்துடன் கூடிய பிரமம் நிமித்தகாரணமா மென்றும் வேதாந்தங்களினால் உணரலாம்.

(25)

26.அடித்தலத்திற்பரிபுரமுஞ்சிலம்புமாட
        வணிமார்பிற்கௌத்துவமுந்திருவுமாடத்
தொடித்தலத்தின்மணிவடமுந்துளவுமாடத்
        துணைக்கரத்திற்சக்கரமுஞ்சங்குமாட
முடித்தலத்திற்கருங்குழலுஞ்சுரும்புமாட
        முகமதியிற்குறுவேர்வுங்குழையுமாடக்
கடித்தலத்திலரைநாணுங்கலையுமாடக்
        காவிரிசூழரங்ககேசராடி ரூசல்.

(இ - ள்.) காவிரி சூள் அரங்கேசர் திருக்காவேரிநதியாற் சூழப்பெற்ற திருவரங்கத்திற்குத் தலைவரே! - அடி தலத்தில் - திருவடிகளில், பரிபுரமும் - கிண்கிணிகளும், சிலம்பும் - பாததண்டைகளும், ஆட - அசைந்தாடவும், - அணி மார்பில் - அழகிய திருமார்பில், கௌத்துவமும் - கௌஸ்துபரத்தின