மும், திருவும் - இலக்குமியும், ஆட - அசைந்தாடவும், - தொடி தலத்தில் - திருத் தோள்களில், மணி வடமும் - இரத்தினவாரமும், துளவும் - திருத்துழாய் மாலையும், ஆட - அசைந்தாடவும், - துணை கரத்தில் - இரண்டு திருக்கைகளிலும், சக்கரமும் சங்கும் - திருவாழியுந் திருச்சங்கமும், ஆட - அசைந்தாடவும், - முடி தலத்தில் - திருமுடியில், கரு குழலும் - கரிய மயிர்முடியும், சுரும்பும் - (அதில்அணிந்துள்ள மலர்மாலைகளில் மொய்க்கின்ற) வண்டுகளும், ஆட - அசைந்தாடவும், - முகம் மதியில் - பூர்ணசந்திரன்போன்ற திருமுகமண்டலத்தில், குறு வேர்வும் - சிறுத்து அரும்புகின்ற வேர்வை நீரும், குழையும் - காதணிகளும், ஆட - அசைந்தாடவும், - கடி தலத்தில் - திருவரையில், அரைநாணும் -, கலையும் - திருப்பரியட்டமும், ஆட - அசைந்தாடவும், சல் ஆடில் -; (எ -று.) (26) 27. | பரந்தலைக்கும்பாற்கடலுட்பசுஞ்சூற்கொண்டல் | | படிந்ததெனக்கிடந்தபடிபடிமேற்காட்டி | | வரந்தழைக்கவிரண்டாற்றினடுவேதோன்றி | | மண்ணுலகைவாழவைத்தவள த்தைப்பாடப் | | புரந்தரற்கும்பெருமாளேயாடிரூடல் | | போதனுக்கும்பெருமாளேயாடிரூச | | லரன்றனக்கும்பெருமாளேயாடிரூச | | லணியரங்கப்பெருமாளேயாடிரூசல். | (இ - ள்.) பரந்து அலைக்கும் பாற்கடலுள் - பரவி அலைவீசுகின்ற திருப்பாற்கடலிலே, பசு சூல் கொண்டல் படிந்தது என - கரிய நீர்கொண்ட மேகம் படிந்தாற்போல, கிடந்த - சயனத்திருக்கோலமாக எழுந்தருளியுள்ள, படி - தன்மையை, படிமேல் காட்டி - நிலவுலகத்திற் பிரதியக்ஷமாக்கி, வரம் தழைக்க இரண்டு ஆற்றின் நடுவே தோன்றி - (அன்பர்களது) வேண்டுகோளை மிகுதியாகத்தந்தருளுமாறு உபயகாவேரிமத்தியில் (ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தில் அர்ச்சாரூபியாக) ஆவிர்ப்பவித்து, மண் உலகை வாழவைத்த - நிலவுலகத்தை வாழச்செய்த, வளத்தை - பெருமையை, பாட - (அடியோங்கள்) பாடாநிற்க, -புரந்தரற்கும் பெருமாளே - தேவேந்திரனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -; போதனுக்கும் பெருமாளே - பிரமதேவனுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -; அரன்தனக்கும் பெருமாளே - சிவபெருமானுக்குந் தலைவரே! ஊசல் ஆடிர் -; அணி அரங்கம் பெருமாளே - ஸ்ரீரங்கநாதரே! ஊசல் ஆடிர் -; (எ - று.) (27) 28. | உடுமாயக்கதிருதிரச்சண்டவாயு | | வுலகலைப்பவடவைசுடவுததியேழுங் | | கெடுமாறுதிரிதருகாலுயிர்களெல்லாங் | | கெடாதுவயிற்றுள்ளிருத்துஞ்சீர்த்திபாட | | நெடுமாயப்பிறவியெல்லாம்பிறந்திறந்து | | நிலத்தோடும்விசும்போடுநிரயத்தோடுந் | | தடுமாறித்திரிவேனையருள்செய்தாண்ட | | தண்ணரங்கநாயகனாராடிரூசல். | |