மருதத்து ஓட - மருதநிலத்திற் பெருகியோடவும், - மருதம் நிலம் கொழும்பாகு - மருதநிலத்தில் விளைகின்ற கரும்பின்சாற்றைக் காய்ச்சியதனாலாகிய வளமுள்ள வெல்லப்பாகு, நெய்தல் தேங்க - நெய்தல்நிலத்தில் தேங்கிநிற்கவும், வரு - பெருகுகின்ற, புனல் - நீரையுடைய, காவிரி - காவேரிநதியினாலே, சூழ்ந்த - சூழப்பெற்றுள்ள, வளத்தை - வளப்பத்தை, பாட - (அடியோங்கள்) பாடாநிற்க, ஊசல் ஆடிர் -; (எ - று.) இதனால், காவிரிபாயப்பெற்ற இந்நாட்டில் நான்குநிலங்களும் அமைந்திருத்தல் கூறினார். தொல்காப்பியத்தில், "முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச், சொல்லியமுறையாற் சொல்லவும்படுமே" என்றவிடத்து, சொல்லாதமுறையாற் சொல்லவும்படு மென்று பொருள்படுதல் பற்றி, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என முறைப்பட வைத்தார்; கலித்தொகையிலும், ஐங்குறுநூற்றிலும் பிறவற்றிலும் வேறுபடக்கோத்தவாறுங் காண்க. நெடுந்தூரத்தும் விளங்குதலின் மலையாகிய குறிஞ்சிநிலத்தை முன்னும், மலையைக் காடும், காட்டை நாடும், நாட்டைக் கடலும் அடுத்துண்மையால், அவற்றை அதனதன்பின்னும் வைத்தன ரென்க. நீரும் நிழலு மில்லாத பாலைநிலம் மனிதசஞ்சாரத்திற்கு இடமாகாது ஆதலின், நீக்கப்பட்டது. பாலைக்கு நிலமில்லை யென்றும், மற்றைநிலங்கள் தம்நிலைதிரியின் அதுவே பாலையா மென்றும் சில ஆசிரியர் கொள்கை. "சேயோன்மேய மைவரையுலகமும்" என்பதனால், முல்லைக்கு முருகன் தெய்வமாதல் பெறப்படும். (29) | 30. | புண்டரிகத்தவன்றவஞ்செய்திறைஞ்சுங்கோயில் | | புரிசடையோன்புராணஞ்செய்தேத்துங்கோயில் | | பண்டிரவிகுலத்தரசர்பணிந்தகோயில் | | பரிந்திலங்கைக்கோன்கொணர்ந்துபதித்தகோயில் | | மண்டபமுங்கோபுரமுமதிலுஞ்செம்பொன் | | மாளிகையுந்தண்டலையுமலிந்தகோயி | | லண்டர்தொழுந்திருவரங்கம்பெரியகோயி | | லமர்ந்துறையும்பெருமானாராடிரூசல். | (இ - ள்.) புண்டரிகத்தவன் - (திருமாலின்) நாபீகமலத்தில் தோன்றி யவனான பிரமதேவன், தவம் செய்து -, இறைஞ்சும் - பிரதிஷ்டைபண்ணித் திருவாராதனஞ்செய்து வணங்கின, கோயில் - கோயிலும், - புரி சடையோன் - முறுக்கிவிட்ட சடைமுடியையுடைய சிவபிரான், புராணம் செய்து -, ஏத்தும் - துதித்த, கோயில் - கோயிலும், - பண்டு - முன்னே, இரவி குலத்து அரசர் - சூரியகுலத்து ராஜாக்கள், பணிந்த - வணங்கிய, கோயில் - கோயிலும், - இலங்கை கோன் - இலங்கைக்கு அரசனாகிய விபீஷணாழ்வான், பரிந்து - விரும்பி, கொணர்ந்து பதித்த - கொண்டுவந்து தாபித்த, கோயில் - கோயிலும், - மண்டபமும் - மண்டபங்களும், கோபுரமும் - கோபுரங்களும், மதிலும் - மதில்களும், செம் பொன் மாளிகையும் - சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட மாளிகைகளும், தண்டலையும் - சோலைகளும், |