மலிந்த - நிறைந்துள்ள, கோயில் - கோயிலுமான, அண்டர் தொழும் - தேவர்கள் யாவரும் வணங்குகின்ற, திருவரங்கம் பெரியகோயில் - திருவரங்கம் பெரியகோயிலில், அமர்ந்து உறையும் - பொருந்தி நித்தியவாசஞ் செய்கின்ற, பெருமானார் - நம்பெருமாளே! ஊசல் ஆடில் -; (எ - று.) இங்கு "கோயில்' என்று கூறியது, அத்திருப்பதியி லெழுந்தருளிய ஸ்ரீரங்கநாதனையும், உபலக்ஷணவகையாற் குறிக்கும். பிரணவாகாரமான ஸ்ரீரங்கவிமானத்திலே ஆதிசேஷசயநத்தில் திருமகளும் நிலமகளும் திருவடிவருடப் பள்ளிகொள்ளுந் திருமால் ஆதியிற் சத்தியலோகத்தில் பிரமனது திருவாராதனத்திருவுருவமாக இருந்ததனால், "புண்டரிகத்தவன்தவஞ் செய்து இறைஞ்சுங்கோயில்' என்றார். சிவபிரான் ஸ்ரீரங்கமாஹாத்ம்யத்தை நாரதமுனிவர்க்கு எடுத்துக்கூறியதாகப் புராணம் இருப்பதால், 'புரிசடையோன் புராணஞ்செய்து ஏத்துங் கோயில்' எனப்பட்டது. சூரியகுலத்து மநுகுமாரனான இக்ஷ்வாகுமகாராஜன் பிரமனைக்குறித்துப் பலகாலம் அரும்பெருந்தவம்புரிந்து அத்தேவனருளால் அவ்வெம்பெருமானைத் தான் பெற்றுத் திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டுவந்து பிரதிஷ்டைசெய்து திருவாராதநஞ்செய்து வந்தனன்; அந்தஸ்ரீரங்கநாதனே இக்ஷ்வாகுமுதல் இராமபிரான்வரையிலுள்ள இரவிகுலமன்னவரெல்லார்க்குங் குலதெய்வமாகி விளங்கினா னாதலால் "பண்டிரவிகுலத்தரசர் பணிந்த கோயில்' என்றும், இராமபிரான் வனவாசஞ்சென்று விபீஷணனுக்கு அபயமளித்துக் கடல்கடந்து இலங்கை சேர்ந்து இராவணாதி ராக்ஷஸ சங்காரஞ் செய்து திருவயோத்திக்கு மீண்டு பட்டாபிஷேகஞ்செய்துகொண்டபின்பு சுக்கிரீவன் முதலிய அனைவர்க்கும் விடைகொடுத்து அவரவரை ஊர்க்கு அனுப்பும்பொழுது, தனது திருவாராதனமூர்த்தியான நம்பெருமாளைத் தனக்கு மிகவும்அந்தரங்கனாகிய விபீஷணாழ்வானிடங் கொடுத்து ஆராதித்துவரும்படி நியமித்துஅனுப்ப, அங்ஙனமே அவ்வரக்கர்பெருமான் அவ்வமரர்பெருமானை அவ்விமானத்துடனே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு இலங்கைநேக்கிச் செல்லும்பொழுது இடைவழியில் உபயகாவேரிமத்தியிலே பெருமான் புடைபெயராது விமானத்துடனே நிலைநின்றருளினனாதலால், "பரிந்திலங்கைக்கோன் கொணர்ந்து பதித்த கோயில்' என்றுங் கூறினார். (30) 31. | அருவரங்கடருபராங்குசனேயாதி | | யாழ்வார்கடம்பிரானாடிரூச | | லிருவரங்கவொளிக்ககலாவிருளகற்று | | மெதிராசன்றம்பிரானாடிரூசல் | | தருவரங்கணீள்பொழிற்கூரத்துவேதா | | சாரியனார்தம்பிரானாடிரூசல் | | திருவரங்கத்தணியரங்கன்றிருமுற்றத்துத் | | தெய்வங்கடம்பிரானாடிரூசல். | |