பக்கம் எண் :

910புராணகதைகள்

திருமால்தானே இங்ஙனம் வந்துள்ளானாதலின், அவனுக்குக் கொடாதே' என்று சொல்லி ஈவது விலக்க, அதுகேளாமல் மகாபலி 'என்னிடம் ஒன்றை இரப்பவன் புருஷோத்தமனாயின் அவனுக்கு நான் அதனைக்கொடுத்துப் புகழ்பெறாதுவிடுவேனோ?' என்றுகூறித் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யும் பொழுது அவ்வசுரராசனிடத்து மிக்க அன்பையுடைய சுக்கிரன் சிறுவடிவங்கொண்டு அம்மாவலியின் கைக்குண்டிகையின் துவாரத்திலே சென்று அடைத்து நீர்விழவொட்டாது செய்ய, அப்பொழுது வாமனன் அங்ஙனம் அடைத்துக்கொண்ட பொருளை அகற்றுவான்போலத் தனது திருக்கையிற் பவித்திரமாகத் தரித்திருந்த தருப்பைப்புல்லின் நுனியினால் அந்தச்சலபாத்திரத்தின் துவாரத்தைக் குடையவே, அதுபட்டுச் சுக்கிரனது கண்ணொன்று சிதைந்த தென்பதாம்.

இராவணனைக் கார்த்தவீரியன் வென்ற கதை:- இராவணன் திக்குவிசயஞ் செய்துவருகிறபொழுது கார்த்தவீரியார்ச்சுனனது மாகிஷ்மதிநகரத்திற்குச் சென்று போர்செய்ய முயலுகையில், அங்குள்ளார் 'எங்களரசன் தனக்கு உரிய மாதர்களுடனே போய் நருமதையாற்றில் ஜலக்கிரீடைசெய்கின்றான்' என்று சொன்னதனால், உடனே இராவணன் அங்கிருந்து நருமதையாற்றைச் சேர்ந்து அதில்நீராடிக் கரையில்மணலாற் சிவலிங்கத்தை யமைத்துப் பிரதிஷ்டைசெய்து பூசிக்கும்போது, அந்த யாற்றில் மேற்கே இறங்கியுள்ள கார்த்தலீரியார்ச்சுனன் தனது நீர்விளையாட்டுக்கு அந்நீர்ப்பெருக்குப் போதாதென்றகருத்தால் அந்நீரைத் தனதுஆயிரங்கைகளுள் ஐந்நூற்றினால் தடுத்து நீரைமிகுவித்து மற்றை ஐந்நூறுகைகளைக்கொண்டு பலவகை விளையாட்டுக்கள் நிகழ்த்துகின்றதனால் எதிர்வெள்ளமாகப் பொங்கி வருகின்ற நீர்ப்பெருக்குத் தனது சிவலிங்கத்தை நிலைகுலையச்செய்ததுபற்றிக் கடுங்கோபங்கொண்டு இராக்கதசேனையுடனே சென்று அருச்சுனனை யெதிர்த்துப்போர்செய்ய, அவன் தனது ஆயிரங்கைகளுள் இருபதினால் இராவணனது இருபதுகைகளைப் பிடித்துக்கொண்டு மற்றையகைகளால் அவனைப் பலவாறு வருத்தித் தனது ஆற்றலால் எளிதிற்கட்டித் தனதுபட்டணத்திற்கொண்டுபோய்ச் சிறையில்வைத்திட, அதனை விபீஷணனால் அறிந்து அவன்பாட்டனாராகிய புலஸ்தியமகாமுனிவர் அருச்சுனனிடம்வந்து வேண்டி அவனுக்கு 'ராவணஜித்' என்ற ஒரு பெரும்பெயரைக் கொடுத்து, இராவணனைச் சிறைவிடுவித்துச் சென்றன ரென்பதாம்.

தார்த்தவீரியனைப் பரசுராமன் கொன்ற கதை:- அவ்வருச்சுனன் ஒரு காலத்திற் சேனையுடனே வனத்திற்சென்று வேட்டையாடிப் பரசுராமரது தந்தையான ஜமதக்நிமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்து அவரநுமதியால் அங்கு விருந்துண்டு மகிழ்ந்து மீளுகையில், அவரிடமிருந்த காமதேனு அவர்க்குப் பலவளங்களையும் எளிதிற் சுரந்தளித்தமை கண்டு அதனிடம் ஆசை கொண்டு அப்பசுவை அவரநுமதியில்லாமல் வலியக்கவர்ந்துபோக, அதனை யறிந்த அப்பார்க்கவராமர் பெருங்கோபங்கொண்டு சென்று கார்த்தவீரியனுடன் போர்செய்து அவனைப் பதினொருஅகௌகிணிசேனையுடனே நிலை