அன்பு கரைந்து - என்றதனால் மனத்தின் தொண்டும், நயனம் பயன் பெற்று என்றதனால் மெய்யின் தொண்டும், பாடுவார் என்றதனால் வாக்கின்றொண்டும் கூறப்பட்டன. பாடுவார் - எடுத்துப் பாடியபின் என்று வரும்பாட்டுடன் கூட்டுக. சொரிந்த - நயனப்பயன் - என்பனவும் பாடங்கள். 323 1589. (வி-ரை.) காவாடும் வன்னெஞ்சர்க் கரியானை - பதிகத் தொடக்கம். பதிகக்குறிப்பு - பதிகப் பாட்டுக்குறிப்புப் பார்க்க. பரவாய சொன்மாலை - பரவு - பரவுதல் - துதித்தல். விரவார் - பகைவராகிய முப்புரவாணர். வெள் எயிறு - பாம்பின் பற்கள் கூரியனவாய் வெள்ளையாய் உள்ளன. திருமுன்றிற்புறம் திருமாளிகையின் புறமுன்றில். விரவார்தம் புரமெரித்த என்பது "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியான்" என்ற தேவாரக் கருத்தினையும், விடையவனார என்பது "விடையேறும் வித்தகனை" என்ற கருத்தினையும், வெள்ளையெயிற் றரவாரம் புனைந்தவர என்பது "அரவாட" என்றதனையும், விரித்தன. வெள்ளெயிற்றின் - என்பதும் பாடம். 324 1590. | கையார்ந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலொடுஞ் செய்யாநின் றேயெல்லாச் செந்தமிழ்மா லையும்பாடி, மையார்ந்த மிடற்றர்திரு மயானத்தை வலங்கொண்டு, மெய்யார்வ முறத்தொழுது விருப்பினொடு மேவுநாள், |
325 1591. | சீர்வளரு மதிற்கச்சி நகர்த்திருமேற் றளிமுதலா நீர்மருவுஞ் சடைமுடியார் நிலவியுறை யாலயங்கள் ஆர்வமுறப் பணிந்தேத்தி யாய்ந்ததமிழ்ச் சொன்மலராற் சார்வுறுமா லைகள்சாத்தித் தகுந்தொண்டு செய்திருந்தார். |
326 1590. (இ-ள்.) கையார்ந்த...செய்யாநின்றே - கைநிறைந்த உழவாராத் திருத்தொண்டினை மிகப்பெரும் காதலுடனே செய்துகொண்டே; எல்லாச் செந்தமிழ் மாலைகளும் பாடி - பற்பல வகையாலாகிய எல்லாச் செந்தமிழ்ப் பதிகங்களையும் பாடி; மையார்ந்த.....தொழுது - திருநீலகண்டரது கச்சித்திருமயானத் தினையும் வலங்கொண்டு உண்மை நிறைவுடைய பேரார்வம் பொருந்தத் தொழுது; விருப்பினொடு மேவுநாள் - விருப்பத்துடன் அங்குப் பொருந்தியிருக்கும் நாளில், 325 1591. (வி-ரை.) சீர்வளரும்....ஏத்தி - சிறப்புப் பெருகும் மதிலுடைய திருக்கச்சிமேற்றளி முதலாகக் கங்கை தங்கிய சடைமுடியார் நிலைபெற எழுந்தருளிய கோயில்களை ஆர்வம் பொருந்தப் பணிந்து துதித்து; ஆய்ந்த...சாத்தி - ஆய்ந்த தமிழ்ச் சொல் மலர்களால் சார்பு பொருந்தும் மாலைகளாகிய திருப்பதிகங்களைச் சாத்தி; தகுந்தொண்டு செய்து இருந்தார் - தக்க திருத்தொண்டுகளைச் செய்து அங்குத் தங்கியிருந்தருளினர். 326 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1590. (வி-ரை.) கையரர்ந்த திருத்தொண்டு - திருவுழவாரப்பணி, "கையாரக் கூப்பியும்" என்றபடி, வைகபெற்ற பய னிதுவே யென்று, மனம் அமைவுபடும் வரை செய்யத்தக்கதாதலின் கையரர்ந்த என்றார்.  திருக்கச்சி மயானம்
|
|