கழியமிகு - மிகப் பெரிய. செய்யா நின்றே - தொடர்ந்து செய்தலின் ஆநின்று என்ற நிகழ்கால இடைநிலையாற் கூறினார். எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி - இவை குறுந்தொகை, நேரிசை, விருத்தம், தாண்டகம் என்பன. நாயனார் அருளிய பதிகங்களுள் பண்வகைக்குக் காந்தாரப் பண்ணிலமைந்த "கரவாடும்" என்ற பதிகம் நிற்க, ஏனையவை யாவும் இந்நான்கு யாப்பினுள் அடங்குவனவாதலின் எல்லாச் செந்தமிழ் மாலையும் என்று முற்றும் மையுந் தந்து ஓதினார். இவ்வாறு நாயனாரது எல்லாத் தமிழும் பெற்றுள்ளது கச்சிக்கு ஒரு சிறப்பாகும். இவ்வாற்றால், நாயனாரது மூன்று திருமுறைகளின் வகுக்கப்பட்ட பதிகங்களையும், ஆளுடைய நம்பிகள் திருப்பதிகமும் பெற்றுடைமையால் தேவாரத் திருமுறைகள் ஏழனுள்ளும் போற்றப்பட்டது கச்சிமா நகரமாம். திருமயானம் - திருக்கச்சிமயானம். தலவிசேடம் பார்க்க. மெய் ஆர்வம் - உண்மை பொருந்தும் ஆர்வம். மெய் - உடல் என்று கொண்டு ஆர்வமுற உடம்பினாலலும் தொழுது என்றலுமாம். கையார - மேவுவார் - என்பனவும் பாடங்கள். 325 1591. (வி-ரை.) கச்சிநகர்த் திருமேற்றளி - இது காஞ்சி நகர எல்லைக்குள் உள்ள தனித்தலம். தலவிசேடம் பார்க்க. நிலவியுறை ஆலங்கள் - பிரியாது பொருந்தி எழுந்தருளும் கோயில்கள். இவை காஞ்சிபுரத்தின் எல்லைக்குள் அனந்தமுள்ளன. "பதிக ளெண்ணி றந்தவத் திருநகரெல்லை" (1153) பார்க்க. இவற்றினைப் பணிந்து நாயனாரருளிய பதிகங்கள் கிடைத்தில் ஆதலின், பதிகங் கிடைத்துள்ள "திருமேற்றளி" யைச் சொல்லி, "முதலாம் ஆலயங்கள்" என்று பிரித்துக் கூறினார். சொனமலராற் சார்வுறு மாலைகள் சாத்தி - இவை கிடைத்திலவேனும் மனம் வாக்குக் காயம் என்ற மூன்றானும் பணிசெய்யும் நாயனாரது நியமம் பற்றி எடுத்துக் கூறினார். ஆர்வமுறப் பணிந்து என மனத்தானும், சாத்தி என வாக்கானும், தொண்டு செய்து என மெய்யானும் கூடிய பணிகள் குறித்தவாறு காண்க. சார்வுறும் - இறைவரது சார்பினைப் பொருந்தச்செய்யும். உறும் - உறுவிக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது. சார்வுறும் - சாத்தத்தகுந்த என்றலுமாம். தகும்தொண்டு - தம்மாற் செய்யத்தக்க எல்லாத் திருத்தொண்டும். இவை சரியையாதி நான்கு நெறியாலும் செய்யத்தக்கன. தகும் - ஏனை அடியார்களும் உலகமும் கண்டு பின்பற்றத் தகும் என்பதும் குறிப்பு. நீர்வளருஞ் சடையவர்தாம் - தந்தொண்டு - என்பனவும் பாடங்கள். 326 "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை" யென்றெடுத்து - (1589) - எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி - (1590) - கச்சித்திருவேகம்பம் I திருச்சிற்றம்பலம் | பண் - கரந்தாரம் |
| கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடைபேறும் வித்தகனை யரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி யிரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே. |
1 |