பக்கம் எண் :


558திருத்தொண்டர் புராணம்

 

சூடுமிளம் பிறைடியார் தமைத்தொழுது போற்றிப்போய்
மாடுபெருங் கடலுடுத்த வான்மியூர் வந்தணைந்தார்.

330

(இ-ள்.) நீடு...புனைந்து - நீடும் திருவுடைய கழுக்குன்றில் எழுந்தருளிய அருட்கூத்தனாரது கழல்களை வணங்கிப், பாடும் தமிழ்த் தொடையாகிய தேவாரங்களினால் இறைவனைப் புனைந்து; பாங்கு...போய் - அப்பக்கத்திலுள்ள பல தலங்களிலும் சென்று இளம்பிறையினைச் சூடும் முடியவராகிய சிவபெருமானைத் தொழுது துதித்து மேற்சென்று; மாடு...மருங்கணைந்தார் - பக்கத்தில் பெருங்கடலாற் சூழப்பட்ட திருவான்மியூர் என்னும் தலத்தை வந்தடைந்தனர் (நாயனார்).

(வி-ரை.) திரு நீடு கழுக்குன்று - என்க. இது வேதகிரி எனப்படுதலால் நீடுதிரு என்றார். நீடு - என்றுமுள்ள. திரு - இறைவர் வாக்காகிய திரு.

கழுக்குன்று - கழுகுகள் பூசித்தலால் இப்பெயரால் வழங்கப்படும். தலவிசேடம் பார்க்க.

திருத்தனார் - அருட் கூத்தியற்றுபவர்.

பாடு தமிழ்த்தொடை - பாடும் தமிழாலாகிய மாலை. பாடு - பெருமையுமாம்.

பாங்கு பல பதிகள் - திரு வன்பார்த்தான் பனங்காட்டூர், திருமாகறல், திருவிடைச்சுரம், திருக்கச்சூராலக்கோயில் முதலியன. இவற்றுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில!

மாடுபெருங் கடலுடுத்த - கடற் கரையில் உள்ள என்றலுமாம்.

330

திருக்கழுக்குன்றம்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
         முதுபிணக்கா டுடையானை முதலா னானை
யாவினிலைந் துகந்தானை யமரர் கோனை
         யாலால் முண்டுகந்த வையன் றன்னைப்
பூவினின்மே னான்முகனு மாலும் போற்றப்
         புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டே னானே.

1

பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
         பாய்புலித்தோ லுடையப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
         சுடருருவி லென்பறாக் கோலத் தானை
யல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
         யாலின்கீ ழிருந்தானை யமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டே னானே.

2-10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- மூவிலைவேற் கையான், சொல்லோடு பொருளனைத்து மானான், கல்லாடை புனைந்தருளுங் காபாலி என்றிவை முதலிய தன்மைகளா லறியப்படுகின்ற கற்பகத்தைத் திருக்கழுக்குன்றிற் கண்ணார நான் கண்டேன்.