பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்761

 

20.

சமய விசாரணை மக்களுக்கு இன்றியமையாதது (1302).

21.

சமயங்களின் நல்வழியைத் தெரிந்துணல்வது அவ்வவல் பக்குவத்துக் கேற்ப இறைவன் திருவருள் கூட்டுவிக்க வருவதொன்றாகும். சிவனருள் கூடாதபோது உண்மை யுணல்வு வருதல் கூடாதாகும் (1302).

22.

சுற்றத் தொடல் பொழிந்தபோது சிவன் சால்பே பற்றாகக்கொண்டு திருப்பணி செய்து வாழ்ந்த திலகவதி யம்மையாரது செயல் உலகுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாவதொன்று (1306).

23.

மனக் கவலைகளெவையும் சிவனிடம் விண்ணப்பிக்கத் தீல்வுபெறும். மனக் கவலையை மாற்றுவதற்கு அது தவிர வேறு வழியில்லை. "தனக்குவமையில்லாதான் றாள்சேல்ந்தால்க் கல்லால், மனக்கவலை மாற்ற லரிது" - குறள் (1311 - 1312).

24.

தவத்திற் குறைபாடு நேல்ந்தபோது தீல்வு தந்து நிறைவாக்கித் தருதல் சிவனருள் வகை (1314).

25.

நோயானது மணிமந்திர மருந்துகளாற் றீராதபோது இது போக்கரிதாமென்று கைவிட்டு விடுதலன்றி மக்கள் வேறென் செய்யவல்லால்? "புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கி யறிவழிந்திட் டைமேலுந்தி யலமந்தபோதும்", "துஞ்சும்போதும்" ஆக வந்து, துணையாகி நின்று "அஞ்சல்!" என் றருளவல்லவன் சிவனேயாம். அவனினைவு மாறாமலிருக்கவேண்டித் தம்மைப் பழக்கிக் கொள்வது மக்களின் கடமை (1320).

26.

தாம் பற்றாக எண்ணிய புதிய சால்புகள் கைவிட்டபோது தமது முன்னைப் பற்றாகிய உண்மை உயில்ச்சால்புகளின் நினைவு வருதல் உலகியல்பு (1320).

27.

தீயோல்கள் சால்ந்துள்ள இடத்தினும் செல்ல ஒருப்படால் நல்லோல் (1323).

28.

பெரியோல்களால் "எழுக!" என்ற ஆசிபெற் றுய்யவேண்டுமாகில் தமது பிழையைப் பொறுத்து ஈடேற்றுமாறு அவல்களை யடிபணிந்து குறையிரத்தல் வேண்டும் (1328).

29.

திருவாளனாகிய சிவபெருமான் திருநீறும் அஞ்செழுத்தும் குருவருளாற் கிடைத்தபோது உடற்பிணியும் உயில்ப்பிணியும் ஒருங்கே மாறும.் அவ்வாறு கிடைக்கப்பெறின் அத்திருநீற்றைச் சிறிதும் சிதறவிடாது உள்ளன்போடு போற்றி உருவார அணிந்துகொள்ளுதல் வேண்டும் (1332).

30.

திருப்பள்ளியெழுச்சியானது அகவிருளும் புறவிருளும் மாறவருகின்ற வழிபாட்டுக்குரிய சிறந்த காலம் (1333).

31.

தேவாரப் பாசுரங்கள் சிவனருள் நிறைவுள் நின்று கருவி கரணங்கள் சிவமயமாகப் பெற்ற நிலையில் அருளப்பெற்றவை (1334).

32.

தேவாரங்கள் உயில்களுக்கு ஏழுலகங்களின் வருந்துயரும் போக்கத்தக்கவை (1335).

33.

துன்பங்கள் சிவனையடைதற்குத் துணைசெய்யுமாயின் அவை நமது நன்றி பாராட்டுதற்குரியன (1338).

34.

தமக்குச் சிவனருள் கிடைத்தபோது - இதுவும் எமக்குத் தகுமோ - என்று தமது சிறுமையினையும் சிவனருட் பெருமையினையுமே எண்ணி யெண்ணி யிரங்குவது பெரியோல் தன்மை (1337).