பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி919

 

இறைவன் மாலுக்கும் பிரமனுக்கும் அளத்தற்கரியவனானான்; ஆயினும் இன்று அவனைக் காணும் அறிவு நமக்கெளிதேயாயிற்று.

அன்றும் - இன்றும் மட்டுமேயன்றி அன்றும் என்று உம்மை இறந்தது தழுவியது; என்றும் ஓர் மூவாமதியான் - வளராத பிறை. உலகங்களாவான் - வியாபகனாய் எங்கும் நிறைந்தும் கடந்தும் நின்றவன். விசுவாந்தர்யாமி - விசுவரூபன் - விசுவசேவியன் - விசுவாதிகன் என்று மறைகளாற் றுதிகப்படும் நிலை குறித்தது. நமக்கெளிதே - அளப்பரியன் - பெருந் தேவர்க்கும் அரியனாயினும் அடியார்க்கெளியன். அறிவு எளிதே - நாம் அடிமைத் திறத்தினின்றோம்; அவர் அவ்வாறு நில்லாதவர் என்ற குறிப்பு. இலிங்க புராணக் குறுந்தொகை பார்க்க.

19

1அறிவானுந் தானே; யறிவிப்பான் றானே;
யறிவா யறிகின்றான் றானே;- யறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே; விரிசுடர்பா ராகாயம்
அப்பொருளுந் தானே யவன்.

20

இறைவன் தானே அறிவான்; அறிவிப்பானும் தானே; அறிவுக்கறிவாய் நின்று அறிகின்றானும் தானே; அறியப்படும் மெய்ப்பொருளுள்களும் தானே; சுடர் - நிலம் - ஆகாயம் முதலிய பொருள்களும் தானே.

உயிர்கட்குக் காட்டியுங் கண்டுமுபகரிப்பவன். எவற்றினும் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் இறைவன்; அறிவான் - காண்பவன்; அறிவிப்பான் - காட்டுபவன்; அறிவாய் அறிகின்றான் - அறிவினுள்ளே அத்துவிதமாகக் கலந்து நின்று உயிர்கள் அறியும்படி தானும் அறிபவன்; அறிகின்ற - படு விகுதி தொக்கு நின்ற செயப்பாட்டுவினை - அறிய்பபடுகின்ற. சுடர் முதலியன சிவனது எட்டுத் திருமேனிகள். "அங்கியும் ஒன்றிற் றங்கிநின் றல்லது தன்றொழி னடத்தா தரகலின், அதுபோல முதல்வனும் உயிரை யதிட்டித்து நின்று எத்தொழிலுஞ் செய்வனென்றுணர்க. உயிர் ஒன்றனை யறிதல் முதல்வன் உடனின்றறிதலையின்றி அறிவித்தன் மாத்திரையான் அமையாதென்பது "தொண்டனே னினையுமா நினையே" விரும்புமா விரும்பே", "தொடருமா தொடரே", "நுகருமா நுகரே" என்றிவ்வாறு முத்திநிலைபற்றி யோதிய திருவாக்குக்களானுமறிக. இவ்வியல்பு நோக்கியன்றே "அறிவானுத் தானே யறிவிப்பான் றானே" என்றோதிய அம்மை. "அறிவா யறிகின்றான் றானே" எனவு மோதியதூஉமென்க. முன் அறிதல் அறிவித்ததற் பொருட்டெனவும், பின் அறிவாயறிதல் விடயத்தில் அழுந்துவித்தற் பொருட்டெனவும் கொள்க" எனவரும் சிவஞான முனிவர் உரை காண்க. (போதம் - 11 - சிற்றுரை).

20

அவனே யிருசுடர்தீ யாகாச மாவான்
அவனே புலிபுனல்காற் றாவா - னவனே
பியமான னாயட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

21

அவனே, ஞாயிறு, திங்கள், நிலம், சீர், நெருப்பு, காற்று, விசும்பு, உயிர் என்ற அட்ட மூர்த்தியுமாய், இவற்றுக்கு வேறாய் ஞானமயனாய் வந்து நின்றானும் ஆம்.

அவனே - முன்பாட்டில் "அறிவானும்" என்பது முதலாகச் சொல்லிய தன்மைகளை உடைய அவனே; முன்னறி சுட்டு; இருசுடர் - ஞாயிறு - திங்கள். இயமானன் - உயிர்; அட்டமூர்த்தியுமாய் - இவை எட்டும் திருமேனிகளாகக் கொண்டவனுமாய்; "நிலநீர்.........எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்" - (திருவா). மூர்த்தியுமாய் - உம்மை இவையன்றி வேறு திருமேனியும்கொண்டு என்று எதிரது