பக்கம் எண் :


920திருத்தொண்டர் புராணம்

 

தழுவிய எச்சவும்மை. வேறு திருமேனியாவது ஞானமயனாகி என்று பின்னர்க் கூறப்படுவது. "உண்மையறி வானந்த வுருவாகி" எட்டுஞ் சொல்லி மேலும் "ஆட்டமூர்த்தியுமாய்" என்றது அவ்வெட்டினையும் அதிட்டிக்கும் மூர்த்திகள் எட்டாதல்பற்றி என்றும், இயமானனா யட்த் மூர்த்தியுமாய் என்றதனால் இவ்வெட்டினும் அதிட்டித்து நிற்றலே யன்றி அவ்வெட்டினும் வியாபித்து நிற்கு முறைமையினும் கூறியவாறு என்றும், இவ்வெட்டும் சகளம் - ஞானமயன் என்றது நிட்களம் என்றும், உரைப்பர் முன் உரைகாரர்.

21

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீ ரிருண்டனைய கண்டத்தீ ரெங்கள்
பிரானீருஞ் சென்னிப் பிறை.

22

கண்டத்தீர்! பிரானீர்! சென்னிப் பிறை இதனை வந்து கொள்வதுபோலும், இப்பாம்பின் சிந்தைதனைத் தெரிந்துகொள்ளக் கடவீர்.

ஆதலின் பாம்பை யணிதலைத் தவிர்மின் என்று பிறையினுக்குப் பரிந்து கூறுவார் போன்று விலக்குதல். பிறை தேய்ந்து இறந்துபடாமல் வளரும்படி வாங்கிவைத்த உமது அருளுக்கு மாறாக அதனை மறைக்கும் அரவின் சிந்தை என்றபடி. நீர் இரா இருண்டனைய என்க. நீர் - மேகம் - வந்து - இராப்போல இருண்டனைய கண்டம் என்க. இருண்டால் அனைய இருண்டனைய என நின்றது. வந்துபிறையிதனை என்று கூட்டுக. நீர் - இருளுதல் - வேகமாய் உருவாதல் கருமை மிகுதியை உணர்த்திக் கருணை மிகுதி காட்டிற்று. 13ஆம் பாட்டின் கருத்தும் காண்க.

22

பிறையும் புனலு மனலரவுஞ் சூடும்
இறைவ ரெமக்கிரங்கா ரேனுங் - "கறைமிடற்ற
வெந்தையார்க் காட்பட்டே" மென்றென் றிருக்குமே
யெந்தையா வுள்ள மிது.

23

இறைவர் எமக்கு இரங்காராயினும் எம் அன்புடைய உள்ளம் அவர்க் காட்பட்டே மென்றென்று மகிழ்வுட னிருக்கும்.

2ஆம் பாட்டின் கருத்துக் காண்க. தயாவுள்ளம் என்பது தையாவுள்ளமென நின்றது. "அ ஐ முதலிடை யொக்குஞ் சஞய முன்" என்பதால் ஐ போல. தயா - அன்பு.

23

இதுவன்றே யீசன் றிருவுருவ மாமா!
றிதுவன்றே யென்றனக்கோர் சேமம்! - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
யின்னுஞ் சுழல்கின்ற திங்கு!

24

மின்னும் சுடர் உருவமாகி மீண்டு, ஆகி, என் சிந்தையின்கண் இன்று சுழல்கின்றதாகிய இத்திருவுருவமே ஈசன் திருவுருவம் ஆம்; இதுவே எனக்கு ஒப்பற்ற பெருஞ் சேமஞ் செய்வதாம்.

சுழல்கின்றது இதுவன்றே - என்று கூட்டுக. அன்றே என்பன சொற்பொருட் பின்வருநிலை. ஏகாரங்கள் - தேற்றம். உறுதிப் பொருள் தந்து எடுத்து" காட்டுதற்கண் வந்தன. சேமம் செய்வதனைச் சேமம் என்றுபசரித்தார். மின்னும் சுடர் உருவாய் - இறைவரை உட்பூசையில் கோடிசூரியனுடைய ஒளியுடையதொன்றும் மின்னல்போலத் தியானிக்கும் முறை காண்க. ஆய் - ஆகி. இன்னும் எப்போதும்.