பக்கம் எண் :

இரட்டைச் செய்யுட்கள்15

 

மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை; அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்.

(11)
 
   
12.

மெய்யை மெய்யாகவும், பொய்யைப் பொய்யாகவும் காணும் தெளிவுடையார், மெய்ப்பொருளை அடைவார்கள். அவர்களே மெய்யான வேட்கையுடையவர்கள்.

(12)
 
   
13.

கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வதுபோல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன.

(13)
 
   
14.

கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல், நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா.

(14)
 
   
15.

தீய கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் வருந்துகிறான். மறுமையிலும் வருந்துகிறான்; இரண்டிலும் அவனுக்குத் துயரமே. தானே செய்த தீய கருமத்தின் விளைவைக் கண்டு இவன் வருந்திப் புலம்புகிறான்.

(15)
 
   
16.

நற்கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் இன்பமடைகிறான், மறுமையிலும் இன்பமுறுகிறான்; இரண்டிலும் அவனுக்கு இன்பமே. தான் செய்த நற்கருமத்தின் விளைவைக் கண்டு அவன் மகிழ்ந்து இன்பமடைகிறான்.

(16)
 
   
17.

தீய கருமத்தைச் செய்தவன் உலக வாழ்வில் வருந்துகிறான், மறுமையிலும் வருந்துகிறான்; இரண்டிலும் அவனுக்குத் துயரமே. 'நான் செய்த பாவம்!' என்று அவன் வருந்துகிறான். நரகத்திலும் அவன் அதிகமாய் வேதனைப்படுகிறான்.

(17)