54. | புஷ்பத்தின் வாசனை காற்றை எதிர்த்து வீசாது;சந்தனம், தகரம்1, மல்லிகை முதலிய (எல்லா) மலர் களின் மணமும் அப்படித்தான். ஆனால் நன்மக் களின் (புகழ்) மணம் காற்றையும் எதிர்த்து வீசு கிறது. நல்ல மனிதனின் புகழ்மணம் நாலு திசை யிலும் பரவி நிற்கிறது. | (11) |
| | |
55. | சந்தனம், தகரம், தாமரை, ஜவந்தி ஆகிய புஷ்ப வகைகளின் நறுமணம் நற்குணத்தின் நறுமணத் திற்கு ஈடாகாது. | (12) |
| | |
56. | தகரம் அல்லது சந்தனத்தின் வாசனை அற்ப மானது; நற்குணமுடையவர்களின் உத்தமமான உயர் மணம் தேவர்களிடத்தும் சென்றுவீசுகிறது. | (13) |
| | |
57. | இத்தகைய சீலங்களுடையவர்களாய், விழிப்புடன் கருத்தோடு வாழ்பவர்களாய், பூர்ண ஞானத்தால் பொலிவுற்று விளங்குவோர்களிடம் செல்ல மாரனுக்குவழி தெரியாது. | (14) |
| | |
58. | வழியிலே கொட்டிய குப்பைக்குவியலிலிருந்து மனத்திற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது. | (15) |
| | |
59. | அதுபோலவே, குப்பை போலுள்ள குருட்டு மக்களி டையே மெய்ஞ்ஞானச் சுடரான புத்தரின் சீடன்தனது ஞானத்தால் ஒளி வீசி விளங்குகின்றான். | (16) |