82. | தரும உபதேசங்களைக் கேட்டறிந்த ஞானிகள் ஆழமாயும் தெளிவாயும், அமைதியாயுமுள்ள ஏரி யைப் போல், சாந்தியடைகிறார்கள். | (7) |
| | |
83. | நன்மக்கள் எதிலும் பற்றுக் கொள்வதில்லை; இன்பங்களை விரும்பி இரைச்சல் போடுவதில்லை. சுகமோ துக்கமோ வந்தால், ஞானிகள் எழுச்சியடைவதுமில்லை; அயர்வு கொள்வதுமில்லை. | (8) |
| | |
84. | தனக்காகவோ மற்றவர்க்காகவோ, புத்திர ஆசை, பொருளாசை, இராஜ்ய ஆசை (பிரபுத்துவத்தில் நாட்டம்) ஆகிய ஆசைகளில்லாமல், அதரும வழி களில் இன்பவாழ்வை அடைய விரும்பாமல் வாழ்பவன் ஒழுக்கமுள்ள உரவோனாயும், ஞானியாயும், அறநெறிச் செல்வனாயும் இருப்பவன். | (9) |
| | |
85. | மனிதர்களில் மிகச் சிலரே (நிருவாண மோட்சமாகிய) அக்கரையை அடைகின்றனர்; மற்றவர் எல்லோரும் (ஜனன-மரண ஸம்ஸாரமாகிய) இக்கரையிலேயேஉழன்று திரிகின்றனர். | (10) |
| | |
86. | தரும உபதேசத்தைக்கேட்டு, அதன்படி நடப்போர் மறு கரையை அடைவர்-கடத்தற்கு அருமையான எமலோகத்தையும் கடந்து செல்வர். | (11) |
| | |
87. | ஞானி இருள் வழியை நீக்கி ஒளியின் நெறியில் செல்வானாக, வீட்டை விட்டு விரும்புவதற்கு அரிய விவேகத்தை நாடித் துறவு வாழ்க்கையின் ஏகாந்த இன்பத்தில் அவன் திளைப்பானாக. | (12) |
| | |
88. | காமிய இன்பங்களைக் கைவிட்டு, எதையும் தனதென்று கொள்ளாமல், ஞானி மனமாசுகளைஅகற்ற வேண்டும்; அந்நிலையில் அவன் ஆனந்தமடைவான். | (13) |