89. | ஞானத்திற்கு உரிய (ஏழு) அங்கங்களில்1 சித்தத்தை நிலைநிறுத்தி, எதிலும் பற்றுவைக்காமல், ஆசைகளை அடக்கி வென்று எவர்கள் மாசற்ற ஒளிமயமாய்த் திகழ்கிறார்களோ, அவர்கள் இந்த உலகி லேயே நிருவாண மோட்சத்தை அடைகிறார்கள். | (14) |
1 | ஏழு அங்கங்கள்-ஞானத்தை அடைவதற்குரியஏழு கருவிகள்; சாமர்த்தியம், ஞாபகம், மனனம், திரிபிடக சாத்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி. சமதிருஷ்டி என்பவை. இவைகளை 'ஸப்த போத்தியங்கங்கள்' அல்லது ' ஸம்போதி அங்கம்' என்பர். |
|
|
|