பக்கம் எண் :

இயல் பத்து  
  
 தண்டனை

127.

தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர்.மரணத்திற்கு எல்லோரும் அஞ்சுகின்றனர். மற்ற உயிர்களையும் தன்னைப்போல எண்ணி ஒருவன் கொல்லவுங் கூடாது. கொலைக்கு உடன்படவுங்கூடாது.

(1)
 
  
128.

தண்டனைக்கு எல்லோரும் நடுங்குகின்றனர்.வாழ்வில் எல்லோருக்கும் பிரியமிருக்கின்றது. மற்ற உயிர்களையும் தன்னைப்போல் எண்ணி ஒருவன் கொல்லவுங் கூடாது. கொலைக்கு உடன்படவுங் கூடாது.

(2)
 
  
129.

இன்பமாக வாழ விரும்பும் உயிர்களை ஒருவன் தன் சுகத்தை நாடித் தண்டித்துத் துன்புறுத்தினால், மரணத்திற்குப் பின் அவன் நலமடைவதில்லை.

(3)
 
  
130.

ஒருவன் தன் சுகத்தை நாடி, தன்னைப்போலவே இன்பத்தை நாடும் ஏனைய உயிர்களைத் தண்டித்துத் துன்புறுத்தாமலிருந்தால், மரணத்திற்குப் பின் அவன் நலம் பெறுவான்.

(4)
 
  
131.

எவரிடத்தும் கடுஞ்சொல் பேசாதே. அதே முறையில் மற்றவர்களும் பதிலுரைப்பார்கள். கோபமான பேச்சு துக்கமளிப்பதால், பதில் பேச்சு உன்னைத் தாக்கும்.

(5)