140. | ஒருவன் அலங்காரமான உடை அணிந்திருந்தாலும், அவன் தெளிந்த சிந்தையுடையவனாயும்,அமைதியானவனாயும். (பௌத்த தரும) நியமத்தில் நிற்பவனாயும், பிரமசாரியாயும், எல்லா உயிர்களிடத்திலும் (ஹிம்சை) உணர்ச்சி நீங்கியவனாயும் இருந்தால், அவனே பிராமணன்,அவனே சமணன்1; அவனே பிக்கு. | (14) | | | | 141. | நன்கு பழக்கப் பெற்ற குதிரைக்குச் சவுக்கு அவசியமில்லை; அதுபோல் தன்னைப் பிறர் குறை கூறாதபடி பழிக்கு அஞ்சும் நாணமுள்ள மனிதன் இவ்வுலகில் இருக்கிறானா? | (15) | | | | 142. | நன்கு பழக்கப்பட்ட குதிரை, சவுக்கு மேலே பட்டதும் (வேகமாக ஓடுவது போல்) சிரத்தையுடனும், தீவிர முயற்சியுடனும் இருப்பாயாக.நம்பிக்கையாலும், நற்சீலங்களாலும், வீரியத்தாலும், தியானத்தாலும், தருமத்தை ஆராய்ந்த நிச்சயத்தாலும், ஞானம், ஒழுக்கம், கருத் துடைமை ஆகியவற்றில் நிறைவு பெற்று (உலகவாழ்வான) இந்தத் துக்கத்தை ஒதுக்கிவிடமுடியும். | (16) | | | | 143. | நீரை நெறிப்படுத்திச் செலுத்துவர் சிற்பக்கலைஞர்; அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத்தாமே அடக்கியாள்வர் நல்லோர். | (17) |
1 | சமணன்-சிரமணன்-சாந்தி பெற்றவன், துறவி.புத்தர் காலத்திய பிராமணரையும் சமணர் என்பது வழக்கம். |
|
|
|