பக்கம் எண் :

இயல் பதினான்கு  
  
 புத்தர்

177.

எவரும் வெல்ல முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர்; இந்த உலகில் எவரும் அணுக முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர். அவர் எல்லையற்ற உணர்வுடையார்; (பிறப்பும் இறப்பு மாகிய) பாதையற்றவர். அத்தகைய புத்தரை எந்த வழியில் இழுத்துச் செல்ல முடியும்?

(1)
 
  
178.

வலை போன்றதும், விஷம் போன்றதுமான ஆசைத்தளை, எதனாலும் வழி தவறாத புத்தரை- எல்லையற்ற உணர்வுள்ளவரை-(பிறப்பும் இறப்பு மாகிய) பாதையற்றவரை-எந்த வழியில் இழுத்துச் செல்ல முடியும்?

(2)
 
  
179.

கருத்தோடு தியானத்தில் ஆழ்ந்தவராயும், பற்றற்ற விடுதலையில் திளைப்பவராயுமுள்ள மெய்யறிவு பெற்றவரைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுகிறார்கள்.

(3)
 
  
180.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்;
அரிது அரிது மானிட வாழ்க்கை;
அரிது அரிது நல்லறம் கேட்டால்;
அரிது அரிது புத்தநிலை அடைதல்.

(4)
 
  
181.

சகல பாவங்களையும் நீக்குதல், நற்கருமங்களைக் கடைப்பிடித்தல், உள்ளத்தைச் சுத்தம் செய்தல்-இதுதான் புத்தருடைய உபதேசம்.

(5)
 
  
182.

'நெடுங்காலம் துன்பத்தைத் தாங்கும் பொறு மையே முதன்மையான தவம்; நிகரற்ற உயர்ந்தபதவி நிருவாணமே' என்று புத்தர்கள் கூறுகின்றனர். பிறரைத் துன்புறுத்துவோன் முனிவன் அல்லன்; பிறரை இகழ்பவன் துறவி அல்லன்

(6)