183. | நிந்தனையை ஒழித்தல், பிறரை வருத்தாமலிருத்தல், அறத்திற்கு1 அடங்கியிருத்தல், நிதான உணவு,ஏகாந்தமாயிருந்து உயர்ந்த சிந்தனைகளில் ஒருமைப் பட்டிருத்தல்-இதுவே புத்தருடைய உப தேசம். | (7) | | | | 184. | பொற்காசுகளை மழையாகப் பொழிந்தாலும்,ஆசைகள் அடங்காமற் பெருகும். ஆசைகளின்படி அனுபவித்தல் அற்ப இன்பம் என்றும், பின்விளைவு துக்கம் என்றும் அறிந்தவன் ஞானியாவான். | (8) | | | | 185. | பூரண ஞானம் பெற்ற புத்தருடைய சீடன் ஆசைகள் அனைத்தையும் அழிப்பதிலேயே இன்புறு வான்; வானுலக இன்பங்கள் கூட அவனுக்கு உவப்பானவை அல்ல. | (9) | | | | 186. | பயங்கொண்ட மனிதர்கள் மலைகளையும், வனங்களையும், புனிதமான மரங்களையும், புண்ணியத் தலங்களையும் புகலிடமாகக் கொள்கிறார்கள். | (10) | | | | 187. | இந்த அடைக்கலம் நல்ல பாதுகாப்பு அல்ல.இந்த அடைக்கலத்தால் மனிதன் வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவதில்லை. | (11) | | | | 188. | ஆனால் புத்தரையும், சங்கத்தையும், கருமத்தையும் சரணமடைதலில் நான்கு உன்னத உண்மை களைத் தெரிந்த ஞானத்தால் தேர்ந்து கொள்கிறான். | (12) |
1 | அறம்-பௌத்த தருமம். இதனை விளக்கும் நூல் 'பாதிமோக்சும்' என்பது; வடமொழியில், பிரதி மோக்ஷம். |
|
|
|