பக்கம் எண் :

புத்தர் 49

189.

துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்கநிவாரண மார்க்கமாகிய அஷ்டாங்க மார்க்கம்1.

(13)
 
  
190.

இதுவே பாதுகாப்பான புகலிடம்; இதுவே தலைசிறந்த சரணம். இந்த அடைக்கலத்தை அடைந்த பிறகு, மனிதன் எல்லா வேதனைகளிலிருந்தும் விடுபடுகிறான்.

(14)
 
  
191.

மக்களிலே திலகமான உத்தம புருடர் (புத்தர்)தோன்றுதல் துர்லபம். அவர் கண்ட இடங்களில் பிறப்பவர் அல்லர். அத்தகைய பரம ஞானி எங்கே பிறந்தாலும் அந்தக் குலம் விளக்கமடைகிறது.

(15)
 
  
192.

புத்தர்களின் தோற்றம் நன்மையளிக்கும்; அவர்களின் தரும உபதேசம் நன்மையளிக்கும்;பௌத்த சங்கத்தில் சேர்தல் நன்மையளிக்கும்;சங்கத்தில் சேர்ந்தவர்களின் தவமும் நன்மையளிக்கும்.

(16)
 
  
193.

தீமைகளையெல்லாம் வென்று, துக்க வெள்ளத்தைத் தாண்டிக் கரையேறிய வணங்கத்தக்க புத்தரையோ, அவர் அடியார்களையோ வணங்குவோன்.

(17)
 
  
194.

நிருவாண நிலைபெற்று, எதற்கும் அஞ்சாது(காற்றைப்போல்) சஞ்சரிக்கும் முத்தர்களை வணங்குவோன்-அடையும் புண்ணியத்தை எவரும் அளவிட முடியாது.

(18)

 


1இதன் விளக்கத்தை அனுபந்தம் ஒன்றில் காண்க.