பக்கம் எண் :

இயல் பதினாறு  
  
 இன்பம்

207.

தியானத்தில் நிலைபெற்று நிற்காமல், உலக பாசங்களில் ஆழ்ந்து, தன் நன்மையையும் கைவிட்டு,இன்பத் தோட்டத்திலே இருப்பவன், தியானத்தில் ஆழ்ந்து முயற்சியோடு இருக்கும் யோகியைக் கண்டு பொறாமைப்படுவான்.

(1)
 
  
208.

இன்பமயமானதையோ துன்பமானதையோ எவனும் பற்றிக் கொண்டிருக்கவேண்டாம். இன்பமானதைக் காணாமையும் துக்கம், துன்பமானதைக் காண்பதும் துக்கமே.

(2)
 
  
209.

ஆதலால், எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழத்தல் துன்பம். ஆசையும்,வெறுப்பும் அற்றவனுக்கு விலங்குகள் இல்லை.

(3)
 
  
210.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை;-
பயம்தான் ஏது?

(4)
 
  
211.

பிரோமையிலிருந்து சோகம் தோன்றுகிறது;
பிரேமையிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
பிரேமையற்றவனுக்குச் சோகமில்லை;-
பயம்தான் ஏது?

(5)