224. | எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள், அல்லும்பகலும் படித்தறிந்தவர்கள்; நிருவாண நாட்டத்திலேயிருப்பவர்கள்-அவர்களுடைய ஆஸவங்கள்அற்றொழியும். | (6) |
| | |
225. | 'மௌனமாயிருப்பவனையும் நிந்திக்கிறார்கள்;அதிகம் பேசுவோனையும் நிந்திக்கிறார்கள்! மிதமாய்ப் பேசுவோனையும் நிந்திக்கிறார்கள்-'ஓஅதலா!'1 இது இன்று தோன்றியதன்று; இது ஒரு பழங்காலத்து மொழி. நிந்திக்கப்படாதார் எவருமே உலகில் இல்லை. | (7) |
| | |
226. | முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும் புகழப்பட்டவனும் ஒருகாலும் இருந்ததில்லை,இருக்கப் போவதுமில்லை, இப்போதுமில்லை. | (8) |
| | |
227. | விவரம் தெரிந்த பெரியோர் நாள்தோறும் கவனித்து வந்து எவனைக் குற்றமற்றவன்,மேதாவி என்றும், தியானமும், சீலமும் நிரம்பியவன் என்றும் புகழ்கிறார்களோ, அவனை- | (9) |
| | |
228. | சாம்பூநதப்2 பொன்னாற் செய்த நாணயம்போன்ற அவனை-நிந்திக்கக்கூடிய தகுதியுடையவர் யார்? தேவர்களே அவனைப் புகழ்கின்றனர்;பிரம்மாவாலும் அவன் புகழப்படுகிறான். | (10) |
| | |
229. | உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்கவும்,உடலை அடக்கி வைக்கப் பழகவேண்டும். தீயஒழுக்கத்தை ஒழித்து, நல்ல ஒழுக்கத்தைப் பேணிவரவும். | (11) |