244. | உயிர்க்கொலை செய்வோனும், பொய் பேசுவோனும், பிறர் பொருள்களைப் பறிப்போனும், பிறர்மனை நண்ணுவோனும், | (12) |
| | |
245. | வெறி கொடுக்கும் மது வகைகளைப் பருகுவோனும் இவ்வுலகிலேயே தம் வேர்களைத் தாமே கல்லியெறிகிறார்கள். | (13) |
| | |
246. | ஏ மானிட, இதை அறிந்து கொள்! பாவத்தை எளிதில் அடக்க முடியாது. பேராசையும் தீயொழுக்கமும் உன்னைத் தீராத துக்கத்தில் அழுத்தாமலிருக்கட்டும். | (14) |
| | |
247. | மக்கள் தங்கள் தகுதிக்கும், தரும சிந்தனைக்கும் தக்கபடி தானம் செய்கின்றனர். பிறருக்கு உண்ண உணவும், குடிக்கப் பாணமும் அளிப்பதைக் கண்டு பொறாமைப்படுவோர் பகலிலோ, இரவிலோ மன அமைதி பெறுவதில்லை. | (15) |
| | |
248. | இந்தப் பொறாமை உணர்ச்சியை அழித்தவன்- வேரோடு அழித்தவனே-பகலும், இரவும் அமைதி பெறுவான். | (16) |
| | |
249. | காமவெறி போன்ற அனல் வேறில்லை; துவேஷத்தைப்போல் பற்றிக்கொள்ளும் முதலை வேறில்லை. (தெளிவின்றி) மயங்குதலைப் போன்ற வலைவேறில்லை; ஆசைகளைப்போல் (அடித்துக் கொண்டு போகும்) ஆறு வேறில்லை. | (17) |
| | |
250. | பிறர் குறையைக் காண்பது எளிது; ஆனால் தன் குற்றத்தை அறிதலே அரிது; மற்றவர் குறைகளை ஒருவன் பதரைத் தூற்றுவது போல் தூற்றிவிடுகிறான். ஆனால், சூதாட்டத்தில் கரவட முள்ளவன் காய்களை மறைப்பது போல், தன் குறைகளை மட்டும் மறைத்துக் கொள்கிறான். | (18) |