பிறர் குறைகளிலேயே நோட்டமுள்ளவன், எப்போதும் புறங்கூறிக் கொண்டேயிருப்பவன், தன் குற்றங்களை வளர விடுகிறான்; அவன் தன் ஆஸவங்களை அழித்தல் கடினமாகி விடும்.
ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. மக்களோ உலகப் பற்றில் இன்புறுகின்றனர். உலகப்பற்று இல்லாதவர் ததாகரே1.
ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. பிரபஞ்சத்திலே நிலையானது எதுவுமில்லை; புத்தர்களுக்கோ நிலையற்றது எதுவுமில்லை.