பக்கம் எண் :

இயல் பத்தொன்பது  
  
 சான்றோர்

254.

பலாத்காரத்தால் தன் காரியத்தை முடிப்பவன் நீதிமான் ஆகான். நன்மை தின்மை இரண்டையும் சீர் தூக்கி முடிவு செய்பவனே ஞானி.

(1)
 
  
255.

நீதியான அஹிம்சை நெறியிலே மற்றவர்களுக்கு வழிகாட்டுவோனே தருமத்தைக் காப்பவன்,மேதாவி, நீதிமான் எனப்படுவான்.

(2)
 
  
256.

அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். வெறுப்பும் அச்சமும் இல்லாமலே உபசாந்தியோடு இருப்பவனே அறிஞன் என்று கருதப்படுவான்.

(3)
 
  
257.

அதிகமாய்ப் பேசுவதால் மட்டும் ஒருவன் அறத்தை ஆதரிப்பவனாகிவிடமாட்டான் (அறவிதிகளைச்) சிறிதளவே அறிந்தவனாயினும்,ஒருவன் தன் வாழ்வில் (மன, மொழி, மெய் ஆகிய)உடலால் அறத்தை உணர்ந்து, தருமம் தவறாமல் நடந்தால், அவனே அறத்தை ஆதரிப்பவன்.

(4)
 
  
258.

தலை நரைத்திப்பதால் மட்டும் ஒருவன் தேர1னாகி விடமாட்டான். அவன் வயது முதிர்ந்திருக்கலாம். ஆனால் பயனில்லாமல் வளர்ந்து வயோதிகமடைந்தவன் என்றே சொல்லப்படுவான்.

(5)

 


1தேரன்-பௌத்தத் துறவிகளில் முதன்மையானவன்;முதியோன்; பெண்பால்-தேரி.