259. | எவனிடம் சத்தியம், தருமம். அஹிம்சை, நிதானம் புலனடக்கம் முதலிய பண்புகள் நிலைத்திருக்கின்றனவோ, எவன் மலங்கள் நீங்கிப் புத்திமானாயிருக்கிறானோ, அவனே தேரன் எனப்படுவான். | (6) | | | | 260. | பொறாமையும், பேராசையும், தீயொழுக்கமும் உள்ளவன், பேச்சாலோ உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகிவிட மாட்டான். | (7) | | | | 261. | எவன் இவைகளையெல்லாம் அழித்துவிட்டானோ வேரொடு பறித்து எறிந்துவிட்டானோ, எவன் குற்றமற்ற மேதாவியோ, அவனே உண்மையான அழகுடையவன்1. | (8) | | | | 262. | புலனடக்கம் இல்லாமல் பொய் சொல்லித் திரியும் ஒருவன், தலையை முண்டிதம் செய்து கொள்வதால் முனிவனாகிவிட மாட்டான். இச்சைகளுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டிருக்கும் ஒருவன் முனிவனாயிருப்பது எங்ஙனம்? | (9) | | | | 263. | பாவ உணர்ச்சிகள் சிறியவையாயினும், பெரியவையாயினும், அவைகளை எப்போதும் அடக்கியாள்பவனே முனிவன் எனப்படுவான். ஏனெனில், அவனே தீமை அனைத்தையும் அவித்தவன். | (10) | | | | 264. | மற்றவர்களிடம் பிச்சை ஏற்பதால் மட்டும் ஒருவன் பிக்கு ஆகிவிடமாட்டான். தருமம் அனைத்தையும் மேற்கொள்பவனே பிக்கு, ஒருபகுதியை மட்டும் மேற்கொள்பவன் பிக்கு ஆகான். | (11) | | | | 265. | எவன் நன்மைக்கும் தீமைக்கும் அப்பாற்பட்டு,பிரம்மசரியத்தைக் கைக்கொண்டு, கருத்தோடு உலகிலே சஞ்சரிக்கிறானோ, அவனே பிக்கு எனப்படுவான். | (12) |
1 | உருவ அழகும், குண அழகும் பொருந்தியவன். |
|
|
|