266. | அறிவில்லாது மூடனாயிருக்கும் ஒருவன் மௌனத்தினால் மட்டும் முனிவனாகிவிட மாட்டான்;ஆனால் தராசு பிடித்து நிறுத்துப் பார்த்து நன்மையை மட்டும் மேற்கொண்டு, | (13) |
| | |
267. | தீமையை விலக்கும் ஒருவனே முனிவனாவான்;அந்தக் காரணத்தாலேயே அவன் முனிவன். இந்த உலகில் இரண்டு பக்கத்திலுள்ளதையும் எடை போட்டுப் பார்ப்பவனே முனிவன். | (14) |
| | |
268. | உயிர்ப் பிராணிகளை ஹிம்சை செய்வதால். ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான்; உயிர்ப் பிராணிகளைத் துன்புறுத்தாததாலேயே அவன் உயர்ந்தவன் எனப்படுவான். | (15) |
| | |
269. | கட்டுப்பாடான ஒழுக்கத்தாலும், திடசங்கற்பத்தாலும், அதிகக் கல்வியறிவாலும், சமாதி நிலையாலும், ஏகாந்தமாய் வசிப்பதாலும் மட்டுமே.- | (16) |
| | |
270. | உலகத்தார் அடைவதற்கு அரிய நிருவாண இன்பத்தை நான் அடைந்துவிட முடியாது. ஓ பிக்கு! ஆஸவங்களை அழிக்கும் வரை திருப்தியுடன் அயர்ந்திருக்கலாகாது.! | (17) |