275. | 'படைக்கப் பெற்ற யாவும் அநித்யம்-நிலையற்றவை'. இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி மார்க்கம்1. | (5) | | | | 276. | 'படைக்கப் பெற்ற யாவும் துக்கமானவை' இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி மார்க்கம். | (6) | | | | 277. | படைக்கப் பெற்ற யாவும் அநாத்மம்2 .்- இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை, இதுவே விசுத்தி மார்க்கம். | (7) |
1 | விசுத்தி மார்க்கம்-மிகவும் பரிசுத்தமான வழி. | 2 | அநாத்மம்-ஆன்மா அற்றவை. இந்தச் சூத்திரத்திற்குப் பலவாறு பொருள் உரைக்கப்படுகிறது. மூலத்தில் 'ஸப்போ தம்மா அநந்தா'-அதாவது 'ஸர்வ தர்மம் அநாத்மம்' என்று கூறப்பட்டுள்ளது. 'தர்மம்' என்பதற்கு என்ன பொருள் கொள்வது என்பதே முக்கியம். 'ஒருவர் உருவங்கள் யாவும் மாயை' என்றும், மற்றொருவர், 'ஜந்துக்களின் குணம், செயல்கள் ஆன்மா இல்லாதவை' என்றும், 'உயிர் வாழ்தலுக்குக் காரணமான தாதுக்கள் (ஸ்கந்தங்கள்) யாவும் ஆன்மா அற்றவை' என்று வேறு ஒருவரும் குறிப்பிடுகின்றனர்.இந்தச் சூத்திரத்திற்கு முந்திய இரண்டு சூத்திரங்களையும் தொடர்ந்து பொருளுரைத்தலே பொருத்தமாகும். பௌத்த தருமப்படி பிரபஞ்சத்தில் தோன்றின யாவும்(பொருள்களும், ஜந்துக்களும்) அநித்தியமானவை, துக்கமானவை, ஆன்மா அற்றவை. முந்திய 277, 278-சூத்திரங்களில் அநித்தியமும், துக்கமும் உணர்த்தப்பட்டன. இதில் அநாத்மம் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அழிவில்லாத தனி ஆன்மா ஒன்று இல்லை. உயிர் ஏகம். அந்த உயிர் வெள்ளத்தில் எழும் அலைகளே மனிதர்கள். ஒவ்வோர் அலைக்கும் தனித் தன்மை இல்லை என்பதை உதாரணமாய்க் கூறலாம். |
|
|
|