பக்கம் எண் :

74 தம்மபதம்

315.

அஞ்சவேண்டாத கருமங்களுக்கு அஞ்சியும்,அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமலும் இருக்கும் மனிதர் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீய கதியை அடைகின்றனர்.

(12)
 
  
316.

பாவமில்லாத இடத்தில் பாவத்தையும், பாவமுள்ள இடத்தில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீயகதியை அடைகின்றனர்.

(13)
 
  
317.

பாவத்தைப் பாவமாகவும், பாவமின்மையைப் பாவமற்றதாகவும் காண்பவர்கள், சத்தியமான கொள்கைகளைப் பின்பற்றி நற்கதியை அடைகின்றனர்.

(14)