[சூத்திரங்கள் பலவற்றில் யானையை உபமானமாகக் கூறியிருத்தல் பற்றி இயலுக்கே 'யானை' என்று பெயர் வந்துள்ளது.] |
| | |
318. | யுத்தத்தில் யானை வில்லிலிருந்து தெறித்து வரும் அம்புகளைத் தாங்குவது போல, நான் பிறர் உரைக்கும் நிந்தை மொழிகளைத் தாங்கிக் கொள் வேன்; ஏனெனில் பெரும்பாலான ஜனங்கள் பண்பற்றவர்களாகவே இருக்கின்றனர். | (1) |
| | |
319. | பழகிய யானையையே போருக்கு அழைத்துச் செல்வர்; பழகிய யானை மீதே அரசர் அமர்ந்து செல்வர். மக்களிலும் நல்வழியில் பழகியவனே,நிந்தை மொழிகளைப் பொறுத்துக் கொள்வோனே சிறந்தவன். | (2) |
| | |
320. | கோவேறு கழுதைகளும், சிந்து நாட்டு உயர்ந்த சாதிக் குதிரைகளும், பெரிய போர் யானைகளும் பழக்கிய பின்னால் சிறந்தவைகளாம். ஆனால் தன்னைத் தானே அடக்கியாள்பவன் இவை அனைத்திலும் சிறந்தவன். | (3) |
| | |
321. | ஏனெனில் இந்தப் பிராணிகள் உதவியால் எந்த மனிதனும் எவரும் சென்றறியாத நிருவாண நாட்டுக்குச் செல்ல முடியாது; மனப் பயிற்சியுள்ள மனிதன் புலனடக்கமுள்ள தன் இயல்பையே வாகனமாய்க் கொண்டு அந்த நாட்டை அடைகிறான். | (4) |