349. | எவன் தியானத்தின் முடிவான உபசாந்தியை அடைந்துள்ளானோ, எவன் பயத்தையும், பாசத் தையும், பாவத்தையும், ஒழித்துவிட்டானோ, அவன் பிறவியாகிய முட்களைக் களைந்தெறிந் தவன், (பல ஸ்கந்தகங்களால் அமைந்த) இந்தச்சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம். | (18) | | | | 350. | எவன் அவாவை அழித்து, எதையும் தேடி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறானோ, எவன்சொற்களையும், அவற்றின் பொருள்களையும் உணரும் சக்தியுள்ளானோ, எவன் எழுத்துக்களின் சேர்க்கையை (முன்னும் பின்னும் இருக்கவேண்டிய முறையை)த் தெரிந்துள்ளானோ,அவனே மகா ஞானி, அவனே மகான்.இந்தச்சடலமே அவன் (எடுக்க நேர்ந்த) கடைசி உடம்பாம். | (19) | | | | 351. | 'நான் யாவற்றையும் பென்றவன், நான் யாவற்றையும் அறிந்தவன், வாழ்வின் நிலைகள்யாவற்றினும் நான் ஒட்டுப் பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று, அவாவை அழித்ததால் நான் முக்தி அடைந்தவன்.எல்லாவற்றையும் நானே கற்றுக் கொண்டபின், எவரை என் குருவென்று காட்டுவேன்?'1. | (20) |
1 | கௌதம சித்தார்த்தர் போதியடைந்து புத்தரானதும் காசிக்கு அருகே சாரநாத்திலிருந்த தம் தோழர் ஐவருக்கு உபதேசிப்பதற்காகச் செல்லும்போது ஜைன சமயத்தைச் சேர்ந்த உபாகர் என்ற பிராமணர் அவரைச் சந்தித்தார். புத்தரின் முகப்பொலிவும், கண்களின் ஒளியும்; புனிதப் பண்பையும், பூர்ண ஞானத்தையும் தெளிவாக எடுத்துக் காட்டியதைக்கண்டு உபாகர், அவருடைய குரு யார் என்று வினவினார். அதற்குப் பதிலாகப் பகவர், ' எனக்கு நானே குரு!' என்று அறிவுறுத்த இதைக் கூறினார். |
|
|
|