358. | கண்ணைக் காத்தல் நலம்; காதைக் காத்தல் நலம்; நாசியைக் காத்தல் நலம்; நாவைக் காத்தல் நலம். | (1) |
| | |
359. | உடலைக் காத்தல் நலம். வாக்கைக் காத்தல் நலம்; மனத்தைக் காத்தல் நலம்; எல்லாவற்றையும் காத்துக் கொள்ளல் நலம.் எல்லாவற்றையும் காத்துக்கொள்ளும் பிக்கு சகல துக்கங்களிலிருந்தும் விடுபடுகிறான். | (2) |
| | |
360. | எவன் கைகளை அடக்கிப் பாதங்களை அடக்கி, வாக்கை அடக்கி தன்னை நன்கு காத்துக்கொண்டவனோ, எவன் தியான இன்பத்திலுள்ளவனோ, எவன் மன அமைதி பெற்றுத் திருப்தியுடன் ஏகாந்தமாக இருக்கிறானோ, அவனையேபிக்கு என்பர். | (3) |
| | |
361. | நாவடக்க முள்ளவனாய், உயர்ந்த கருத்துக்களை உபதேசிப்பவனாய்,கர்வமற்ற அமைதியுள்ள வனாய்த், தருமத்தையும் அதன் பொருளையும்விளக்கிக் கூறுதல் இனிமையேயாம். | (4) |
| | |
362. | தரும உபதேசத்தை மகிழ்ச்சியுடன் பின்பற்றி,தருமத்திலேயே திளைத்து, தருமத்தையேஎப்போதும் சிந்தனை செய்து, தரும வழியிலேயேநடக்கும் பிக்கு உண்மையான தருமத்திலிருந்து பிறழ்வதில்லை. | (5) |
| | |
363. | அவன் தனக்குக் கிடைத்ததை அலட்சியமாகஎண்ணாமலும், மற்றவர்களிடம் பொறாமைகொள்ளாமலும் இருக்க வேண்டும். பிறரைக்கண்டு பொறாமைப்படும் பிக்கு மனச் சாந்திபெறுவதில்லை. | (6) |