364. | பிக்கு ஒருவன், தனக்குக் கிடைத்தது அற்பமேயா யினும், அதை இகழாமல், தூயவாழ்வுடன்சோம்பலின்றி உழைத்து வந்தால், அவனைத் தேவர்களும் புகழ்கின்றனர். | (7) | | | | 365. | எவ்விதமான நாமரூபத்தையும், ஒருபோதும் தனது என்று கருதாமல், ஒன்றும் இல்லாதநிலைக்கு வருந்தாமல் இருப்பவனே பிக்கு எனப் படுவான். | (8) | | | | 366. | (எல்லோடனும்) அன்புடன் பழகி, புத்தருடையதருமத்தில் இன்புற்று வாழும் பிக்கு, வாழ்வின்துயரம் நீங்கி, சாந்தி நிலையமான நிருவாணஇன்பத்தை அடைவான். | (9) | | | | 367. | ஓ பிக்கு! இந்த ஓடத்தைக் காலியாக்கு; பாரம்குறைந்தால் இது இலகுவாக ஓடும். விருப்பையும்வெறுப்பையும் சேதித்துவிட்டால், நீ விடுதலைப்பேற்றை அடைவாய். | (10) | | | | 368. | ஐந்தை வெட்டித் தள்ளவும்; ஐந்தைக்கைவிடவும்;ஐந்தில் தேர்ந்து மேலே உயரவும். ஐந்து தளை களிலிருந்தும் தப்பிய பிக்கு 'ஓகதிண்ணா'-'வெள்ளத்தைக் கடந்தவன்'- என்றும் சொல்லப் படுகிறான்1. | (11) | | | | 369. | ஓ பிக்கு! தியானம் செய்வாயாக, அசிரத்தையாக இருக்கவேண்டாம். உனது சிந்தனை பலன்களின் இன்பங்களில் திளைத்திருக்க வேண்டாம். அசிரத்தையினால், பழுக்கக்காய்ந்த இரும்பு உருண்டைகளை விழுங்க நேராமலும், அவைசுடும்போது 'இது துக்கம்' என்று கதறாமலும் இருக்க வழி செய்து கொள்ளவும். | (12) |
1 | இதன் விளக்கம் அனுபந்தம் மூன்றில் காண்க. |
|
|
|