370. | ஞானமில்லாதவனுக்குத் தியானம் இல்லை; தியானமில்லாதவனுக்கு ஞானம் இல்லை. தியானமும், ஞானமும் சேர்ந்திருப்பவனே நிருவாணத் தின் பக்கம் இருக்கிறான். | (13) | | | | 371. | சாந்தியடைந்த உள்ளத்துடன் ஒரு பிக்கு காலியா யுள்ள ஒரு மனைக்குள் சென்றால், தருமத்தைஅவன் மெய்க் காட்சியுடன் தெரிந்திருப்பதன்மூலம், மனிதர் அடைவதற்கு அரிதான இன் பத்தை அடைகிறான். | (14) | | | | 372. | அவன் (உடலின் தோற்றத்திற்குக் காரணமா யுள்ள மூலப் பொருள்களான) ஸ்கந்தங்களின்சேர்க்கையையும், பிரிவையும் பற்றித் தெளியும்போதெல்லாம், இன்பமும், மகிழ்ச்சியும் அடைகிறான், அறிந்தவர்களுக்கு அதுவே நித்தியமானவாழ்வு. | (15) | | | | 373. | அறிவுள்ள பிக்குவுக்கு இதுவே அடிப்படையானமுறை; புலன்களை அடக்குதல், திருப்தி, தருமத் தின்படி காத்துக்கொள்ளல், புனித வாழ்வு,பெருமை, ஊக்கம். | (16) | | | | 374. | அவன் யாவர்க்கும் இனியவனாக வாழ்வானாக;தன் கடமைகளைத் திறமையுடன் நிறைவேற்றிவருவானாக;பின்னர் அவன் தனது இன்ப நிறை வாய் துன்பத்தை ஒழித்து விடுகிறான். | (17) | | | | 375. | பிக்குக்களே! வஸ்ஸிகைச் செடி வாடிப்போனமலர்களை உதிர்த்து விடுவதுபோல் நீங்களும்விருப்பு வெறுப்புக்களைக் கைவிட்டு விட வேண்டும். | (18) | | | | 376. | உடலில் அமைதி, பேச்சில் அமைதி, உள்ளத்தில் அமைதியுடன் நிதான நிலைபெற்று, உலகின்ஆசைத் தூண்டுதல்களை ஒழித்த பிக்குவே உப சாந்தி பெற்றவன் என்று கூறப்படுவான். | (19) |
|
|
|