377. | ஓ பிக்கு! உன்னை நீயே தூண்டிக்கொள்; உன்னை நீயே சோதனை செய்துகொள்;உன்னை நீயே தற்காப்புச் செய்து கவனமா யிருந்தால், நீ இன்புற்று வாழ்வாய். | (20) | | | | 378. | ஒருவன் தனக்குத்தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம்.ஆதலால் வணிகன் உயர்ந்தகுதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னைநீயே அடக்கிப் பழகவும். | (21) | | | | 379. | மன மகிழ்ச்சியோடும், அமைதியோடும், புத்ததருமத்தில் நம்பிக்கை கொண்ட பிக்கு (துயர மான) வாழ்வை நீத்து இன்பமயமான சாந்திநிலையை அடைவது திண்ணம். | (22) | | | | 380. | இளவயதாயிருப்பினும், புத்த தருமத்தில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடும் பிக்கு, மேகத் திரையிலிருந்து விடுபட்ட வெண்மதி போல, இவ்வுலகில் ஒளியைப் பரப்புகிறான். | (23) |
|
|
|