பக்கம் எண் :

இயல் இருபத்தாறு  
  
 பிராமணன்

381.

ஓ பிராமணா! வீரத்துடன் எதிர்த்து வெள்ளத்தைத்தடுத்து நில்; ஆசைகளை விரட்டிவிடு. படைக்கப்பட்ட எல்லாம் அழிவடையும் என்பதைஉணர்ந்த பிறகு, படைக்கப் பெறாததை நீஅறிவாய்.

(1)
 
  
382.

(தன்னடக்கம், ஆன்மஞானம் என்ற) இரண்டுதருமங்களிலும் அக்கரை கண்ட பிராமணனுக்கு அனைத்தையும் அறியும் ஆற்றலுள்ள அவனுக்குப் பந்தங்கள் யாவும் ஒழிகின்றன.

(2)
 
  
383.

எவனுக்கு இக்கரையுமின்றி, அக்கரையுமின்றி1இரண்டுமில்லையோ, எவனுக்கு அச்சமும்,கட்டுக்களும் ஒழிந்தனவோ, அவனையே நான்பிராமணன் என்று கூறுவேன்.

(3)
 
  
384.

எவன் தியானத்துடன் உள்ளானோ, ஆசைகளற்றவனோ, நிலையான அமைதியுள்ளவனோ கடமைகளைச் செய்து முடிப்பவனோ, எவன் மாசற்றவனோ, எவன் உத்தமமான ஞானியின்முடிவான நிலையை அடைந்தவனோ, அவனையே நான் பிராமணன் என்று அழைப்பேன்.

(4)
 
  
385.

ஆதித்தன் பகலில் ஒளி கொடுக்கிறான். சந்திரன் இரவை ஒளி செய்கிறான்; போர் வீரன் கவசம் அணிந்து பிரகாசிக்கிறான்; பிராமணன் தியானத் தில் பிரகாசிக்கிறான்; புத்தர் இரவும் பகலும் எல்லாப் பொருள்களையும் தம் ஞான ஒளியால்பிரகாசிக்கச் செய்கிறார்.

(5)

 


1இக்கரை-புறத்தேயுள்ள ஆறு பொறிகள். அக்கரை-அகத்தேயுள்ள ஆறு புலன்கள்.