386. | ஒருவர் பாவத்தை ஒழித்ததால் பிராமணன் என் கிறோம்; சாந்தியில் வாழ்வதால் சமணன் என்கிறோம்; மலங்களை வென்றதால் மலமற்றவன்(ப்ரவ்ராஜிதா) என்கிறோம். | (6) |
| | |
387. | பிராமணனை எவரு0ம் தாக்குதல் தகாது; தாக்கப்பட்ட பிராமணன் தாக்கியவன் மீது பாய்தலும் தகாது. பிராமணனைக் கொல்வோன் பழிக்கு ஆளாவான்; அத்தீயோனிடம் கோபத்தைச் செலுத்துவோன் அதிகப் பழிக்கு ஆளாவான். | (7) |
| | |
388. | வாழ்க்கையின் இன்பங்களில் மனம் ஆழ்ந்து விடாதபடி அடக்குதல் பிராமணனுக்குச் சாமானியமான சிறப்பன்று; எங்கெல்லாம் மற்றவர்களுக்கு ஹிம்சைசெய்யும் எண்ணம் அடக்கப்படுகிறதோ,அங்கெல்லாம் துக்கம் தொலைந்து போகிறது. | (8) |
| | |
389. | மெய், வாய், மனம் ஆகிய மூன்றிலும் அடக்க முள்ளவனையே நான் பிராமணன் என்று சொல் வேன். | (9) |
| | |
390. | பூர்ண ஞானம் பெற்ற புத்தர் (ஸம்மா ஸம்புத்த)உபதேசித்த தருமத்தை உணர்ந்தவனை, பிராமணன் வேள்வியில் அக்னியை வணங்குவது போல் மக்கள் வணங்க வேண்டும். | (10) |
| | |
391. | ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால்அன்று; தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும், தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான்.அவனே பிராமணன். | (11) |