392. | மூடனே! சடைத்தலையாலும், மான்தோல் ஆடையாலும் என்ன பயன்? புறத்தை நீ தூய்மை செய்கிறாய்; என் அகமோ தீமைகள் நிறைந்தகாடாக இருக்கிறது. | (12) | | | | 393. | பிறர் கழித்து நீக்கிய வஸ்திரங்களை அணிந்து, உடல் மெலிந்து, நரம்புகள் தெரியும்படி உலர்ந்து, வனத்திலே ஏகாந்தமாகத் தியானம் செய்பவ னையேதான் பிராமணன் என்று சொல்வேன். | (13) | | | | 394. | தாயைக் கொண்டோ, குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் பிராமணன் என்று கூறுவதில்லை. அவன் செல்வனாயிருந்தால்,போவாதி1 என்று அழைக்கப்படுவான்; ஆனால் ஏழையாய்ப் பொருளாசையும் இல்லாமலிருந்தால் அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (14) | | | | 395. | சகல பற்றுக்களையும் சேதித்தவன், அச்சமற்றவன், உறவு பந்தங்களிலிருந்து விடுபட்டவன்,(அசத்தியத்திலிருந்து) ஒதுங்கியவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல் வேன். | (15) | | | | 396. | தன்னைப் பிணித்துள்ள (துவேஷமாகிய) தோலையும், (ஆசையாகிய) வாரையும், (போலிச் சமயக் கொள்கைகளாகிய) சங்கிலியையும், (அஞ்ஞான மாகிய) குட்டையையும் அறுத்துக் கொண்டுபோதியடைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (16) |
|
|
|