397. | தான் ஒரு குற்றமும் செய்யாதிருந்தும் தனக்குக்கிடைக்கும் வசைகளையும், அடிகளையும், சிறைத் தண்டனையையும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டு பொறுமையே தன் ஆற்றலாகவும்,பலங்களே1 தன் சேனைகளாவும் பெற்றுள்ளவன்எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (17) | | | | 398. | வெகுளியை விட்டவன், கடமைகளிலே கவன முள்ளவன், ஒழுக்க விதிகளின்படி நடப்பவன்,பரிசுத்தமானவன், தன்னடக்க முள்ளவன்எவனோ, எவன் இவ்வுடலைக் கடைசி உடலாகக்கொண்டுள்ளானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (18) | | | | 399. | தாமரை இலைமேல் தண்ணீர் போலவும், ஊசிமுனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (19) | | | | 400. | இந்தப் பிறவியிலேயே தன் துக்கங்கள் அழிந்தொழியும் என்று அறிந்து, தன் (பாவச்) சுமைகளை எறிந்து விட்டவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்பேன். | (20) | | | | 401. | ஆழ்ந்த ஞானமும், மேதாவிலாசமும் பெற்றவன்;நன்மார்க்கத்தையும், துன்மார்க்கக்தையும் அறிந்தவன், மெய்ப் பொருளை அடைந்தவன் எவனோ. அவனையே நான் பிராமணன் என்றுசொல்வேன். | (21) | | | | 402. | இல்லறத்தார், துறவறத்தார் இருவருடனும் கலந்து கொள்ளாமலும், அடிக்கடி. (பிறருடைய)வீடுகளுக்குச் செல்லாமலும், தேவைகளைக் குறைத்துக் கொண்டும் வாழ்பவன் எவனோ,அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (22) |
1 | பலங்கள்- சிரத்தை, சாமர்த்தியம், ஞாபகம், மனனம், ஊகித்தல் ஆகிய பலங்கள். |
|
|
|