403. | நிற்பனவும், திரிவனவுமாகிய எவ்வுயிரையும் துன் புறுத்தாமலும், வதைக்காமலும், வதைக்கக் காரணமாயில்லாமலும் எவன் உள்ளானோ,அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (23) | | | | 404. | பகைமை உணர்ச்சியுள்ளவர் நடுவே பகைமை யற்றும், தடியெடுத்து நிற்போர் நடுவே சாந்தியுடனும், ஆசையுடையோர் நடுவே ஆசையற்றும் உள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (24) | | | | 405. | எவனுடையராகத் துவேஷங்களும், கர்வமும்,கபடமும் ஊசி முனையிலிருந்து உருண்டு விழும்கடுகு போல் ஒழிந்து விட்டனவோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (25) | | | | 406. | உண்மையே பேசுவோன், இன்சொல்லும், தெளிந்தபொருளும் விளங்கப் பேசுவோன், எவர் மனமும்நோவாமல் பேசுவோன் எவனோ அவனையேநான் பிராமணன் என்று சொல்வேன். | (26) | | | | 407. | இந்த உலகில் தனக்கென்று அளிக்கப்படாத எதை யும்-அது நெடியதோ, குறுகியதோ, பெரிதோ,சிறிதோ, நல்லதோ, கெட்டதோ-ஏற்றுக்கொள் ளாதவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (27) | | | | 408. | இகத்திலும், பரத்திலும், எதிலும் ஆசையற்றவன்,எதிலும் நாட்டமற்றவன், தளைகளற்றவன்எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (28) | | | | 409. | எவனுக்கு வேட்கையில்லையோ, ஞானத்தால் ஐயங்கள் தீர்ந்து விட்டனவோ, எவன் நித்தியமான மெய்ப்பொருளில் ஆழ்ந்துள்ளானோ - அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (29) |
|
|
|