410. | எவன் இவ்வுலகில் புண்ணிய, பாவங்களைப் பற்றிய தொடர்புகளுக்கு அதீதமாய்ச் சென்றவனோ, எவன் சோகமின்றி, உணர்ச்சி வெறிகளைக் கை விட்டுத் தூய நிலையிலுள்ளானோ,அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (30) | | | | 411. | எவன் சந்திரனைப்போல் களங்கமற்றும், பரிசுத்த மாயும், தெளிவாயும், கலக்கமில்லாமலும் விளங்கு கிறானோ, எவனிடம் உல்லாசம் அறவே அழிந்துவிட்டதோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (31) | | | | 412. | பிறப்பு, இறப்புக்களும்,மயக்கமும் உள்ள கடத்தற்கு அரிய இந்தச் சேற்றுப் பாதையைத்தாண்டி மறு கரையை அடைந்தவன், தியான முள்ளவன், கலக்கமற்றவன், ஐயமற்றவன்,எதையும் பற்றாதவன், சாந்தி பெற்றவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்றுசொல்வேன். | (32) | | | | 413. | இவ்வுலகில் புலன் இன்பங்களைத் துறந்து, தங்குவதற்கு ஒரு வீடில்லாமல் திரிகின்றவன், (உட லோடு) வாழும் வாழ்வின் ஆசை அனைத்தையும் களைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (33) | | | | 414. | இவ்வுலகில் அவா அனைத்தையும் அவித்துத்(தங்குவதற்கு) ஒரு வீடில்லாமல் திரிகின்றவன்,(உடலோடு) வாழும் வாழ்வின் ஆசைகள் அனைத்தையும் களைந்தவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (34) | | | | 415. | மானிடரின் போகங்களையும், தெய்விகமான போகங்களையும் உதறிவிட்டு, எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விலகியவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். | (35) |
|
|
|