பக்கம் எண் :

8கபிலர் அகவல்

 

மாந்தரிற்பேதமாம்
            வடிவெவர்கண்டுளார்
வாழ்நாளுறுப்புமெய்
            வண்ணமோடறிவினில்
வேற்றுமையாவதும்
            வெளிப்படலின்றே
தென்றிசைப்புலையன்
            வடதிசைக்கேகில்
பழுதறவோதிப்
            பார்ப்பானாவான்
வடதிசைப்பார்ப்பான்
            தென்றிசைக்கேகின்
நடையதுகோணிப்
            புலையனாவான்
                          (அதுநிற்க)
சேற்றிற்பிறந்த
            செங்கழுநீர்போலப்பிரமற்குக்
கூத்திவயிற்றிற்
            பிறந்தவசிட்டரும்
வசிட்டருக்குச்சண்டாளி
            வயற்றிற்பிறந்தசத்தியரும்
சத்தியர்க்குப்புலைச்சிதோள்
            சேர்ந்துபிறந்தபராசரரும்
பராசரருக்குமீன்வாணிச்சி
            வயிற்றிற்பிறந்தவியாசரும்