| 100 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
வழங்கும் மொழி வடுகு. இச்செய்திகளை அகநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. ‘‘பனிபடு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்; (பா. 211) குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய வேங்கடவரைக்கு அப்பால் வேற்றுமொழி வழங்கும் நாட்டில் இருப்பராயினும்‘‘ இதனால் வேங்கடமலை வரையிலுந்தான் தமிழ்நாடு; அதற்கு அப்பால் உள்ளது வேற்றுமொழி வழங்கும் நாடு என்பதைக் காணலாம். ‘‘வினைநவில் யானை விறல்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள்ளருவி வேங்கடத்து உம்பர், ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... . ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... . . வடுகர் தேஎத்து, ‘‘நிழல்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல் அவிர் அரும்சுரம் நெடிய என்னாது அகறல் ஆய்ந்தனர்; (பா. 213) போர்த் தொழிலிலே சிறந்ததென்று பேசப்படும் யானைப் படை - வெற்றிகொள்ளும் போர்த்திறமை - இவைகளையுடைய தொண்டையர்களின் ஆட்சிக்குட்பட்டது: கூட்டமாக மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும் மிகவுயர்ந்த சிகரத்தை யுடையது; உயர்ந்த வெண்மையான அருவியை உடையது. இத்தகைய வேங்கடமலைக்கு அப்பால் உள்ள வடுகர் வாழும் தேசத்திலே நிழலற்ற நீரற்ற-நீண்டவழியான-நெருப்பு மயமான-நடப்பதற்கு அரிய பாலைவனத்தை நீண்ட தூரம் என்று நினைக்காமல் கடந்து செல்வதற்கு எண்ணினார். ’’ வேங்கடமலை பண்டைக் காலத்தில் தொண்டை நாட்டு மன்னர்களின் ஆட்சியிலேயிருந்தது; அதற்கு அப்பால் உள்ள |