| 150 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
தீயைப் போன்ற தளிர்களையுடையதும், குளிர்ந்த நிழலைத் தரக் கூடியதும், பல கிளைகளைக் கொண்டதுமான ஆல மரத்திலும், கடம்ப மரத்திலும், நல்ல ஆற்றின் நடுவிலும், காற்று உள்ளே புகமுடியாத வலிமையான தன்மையுள்ள குன்றுகளிலும், மற்றவிடங்களிலும், அவ்வவைகளிலே வெவ்வேறு பெயர்களுடன் எல்லாவிடங்களிலும் நீயே வாழ்கின்றாய்’’. திருமாலே பலவிடங்களிலும் பல தெய்வங்களாகக் காட்சி தருகின்றார். ‘‘ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ! (பா. 1. வரி 46,47) ஐந்து தலைகளையும், உயர்ந்த தெய்வத்தன்மை பொருந்திய சிறந்த ஆற்றலையும், வலிமையையும் உடைய சிவபெருமானும் நீ. உலகங்கள் ஒடுங்கும் இடமும் நீ’’. திருமாலே சிவபெருமானாகவும் காட்சியளிக்கின்றார். ‘‘தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீயென மொழியு மால் அந்தணர் அருமறை (பா. 3 வரி 13-14) தாமரைப் பூவிலே பிறந்த நான்முகனும், அவனுடைய தந்தையும் நீயென்றே அந்தணர்களின் அரிய வேதங்கள் அறைகின்றன’’. திருமாலே நான்முகனாகவும் காட்சியளிக்கிறார். திருமாலே எல்லாப் பொருள்களிலும் இருக்கின்றார்; எல்லாப் பொருள்களாகவும் இருக்கின்றார்; எல்லாத் தெய்வங்களாகவும், எல்லா இடங்களிலும் இருக்கின்றார்; அவரே மும்மூர்த்திகளாகக் காட்சியளிக்கின்றார்; திருமாலைப்பற்றிய பாடல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. திருமாலிருங்குன்றம் உலகில் உள்ள குன்றங்களிலே திருமாலிருங்குன்றமே சிறந்தது. இதற்குக் காரணம் இக்குன்றம் திருமாலைத் தன்மேல் |