பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்151

தாங்கிக்கொண்டிருப்பதுதான். இவ்வாறு கூறுகின்றது பரிபாடல். திருமாலிருங்குன்றம் - அழகர்மலை

‘‘புலவர்களால் ஆராய்ந்து கூறி, உயர்ந்தனவென்று பாடப்பட்ட பெரிய குன்றுகள் பல உண்டென்றால், ஆம்! உண்மையாகவே பல குன்றுகள் உண்டு. அத்தகைய சிறந்த பல குன்றுகளிலே நிலத்தில் வாழ்கின்றவர்களின் பசியைத் தணித்து, நிறைந்த பயன்களையெல்லாம் நிலையாகச் சுரந்து கொண்டிருக்கும் குன்றுகள் சிலவேயாம்.

அச் சில குன்றுகளிலும் தெய்வங்கள் விரும்புகின்ற மலர் நிறைந்த தடாகங்களையும், மேகங்கள் படிந்திருக்கின்ற உச்சியையும் உடைய குன்றுகள் சிலவேயாம்.

இத்தகைய குன்றுகள் சிலவற்றினும் சிறந்த குன்று எதுவென்றால், ஒலிக்கின்ற கடலையும் கடற்கரைச் சோலையையும் போன்றது; பொருந்திய சொல்லும் அதன் பொருளும் போன்றது; எல்லா அழகும் இன்பமும் நிறைந்தது; வேறுவேறு உருவாக நின்று ஒரே தொழிலைச் செய்கின்ற கண்ணனையும், அவன் முன்னோனையும் தாங்கி நிற்பது; நீண்ட காலமாக நிலைத்திருப்பது; உயர்ந்த பெரிய குன்றம்; இதுவே சிறந்த குன்றமாகும்.

‘‘புலவர்ஆய்பு உரைத்த புனைநெடுங் குன்றம்
பலவெனின் ஆங்கவை பலவே; பலவினும்
நிலவரைஆற்றி, நிறைபயன் ஒருங் குடன்
நின்றுபெற நிகழும் குன்றவை சிலவே;
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலரகன் மார்பின், மைபடி குடுமிய
குலவரை சிலவே, குலவரை சிலவினும்
சிறந்தது, கல்லறைகடலும் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,