பக்கம் எண் :

152எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

எல்லாம் வேறுவேறுஉருவின் ஒருதொழில் இருவர்த்
தாங்கும் நீள்நிலை ஓங்கிருங் குன்றம்’’.                     (பா. 15. வரி 4-14)

இதனால் திருமாலிருங்குன்றத்தின் இயற்கை வளத்தையும், சிறப்பையும் காணலாம்.

‘‘சிலம்பாற்றைத் தரித்திருக்கின்ற-சிறந்த அழகமைந்த சோலைகள் நிறைந்த-தொடர்ந்த புகழ் மொழிகளையுடைய திருமாலிருங்குன்றம்.

சிலம்பாறணிந்த சீர்கெழு திருவின்
சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்’’             பா. 15. வரி 22-23)

திருமாலிருங்குன்றத்தில் உள்ள சிலம்பாறு. அக்குன்றத்தின் இயற்கையழகு, சோலைகள், அக்குன்றின் பழம்புகழ் ஆகியவைகளை இப்பகுதியாற் காணலாம்.

சிலம்பு-மலை. சிலம்பாறு மலையிலிருந்து ஓடிவரும் ஆறு. இதனை வடமொழியாளர் நூபுரகங்கையென்று மொழிபெயர்த்தனர். நூபுரம்-காலில் அணியும் சிலம்பு.

திருமாலிருங்குன்றம் மிகப் பழங்காலத்திலிருந்தே திருமால் வாழும் திருப்பதியாகவே இருந்து வருகின்றது. சிலர் சொல்வது போல அது ஒரு காலத்தில் முருகவேள் குன்றாக இருந்தது; பின்னால் திருமால் குன்றாக மாறியது; என்பதற்குச் சங்க இலக்கியங்களிலே ஆதரவில்லை.

திருமுருகாற்றுப்படையிலே உள்ள பழமுதிர் சோலையைத் திருமாலிருஞ் சோலையென்று கூறுகின்றனர் சிலர். அந்தத் திருமுருகாற்றுப்படையும, இந்தப் பரிபாடற் பாட்டும் கடைச்சங்க காலத்துப் பாடல்கள்; ஏறக்குறைய ஒரே காலத்தவை. திருமுருகாற்றுப்படை தோன்றிய காலத்தில்