பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்9

விருந்தினர்களாலும், புதல்வர்களாலும் நீங்கும். இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூறுவது மருத ஒழுக்கம்; மருதத்திணை.

இந்த ஐந்திணை ஒழுக்கத்திற்கும் ‘‘அன்போடு கூடிய ஐவகை ஒழுக்கம்’’ என்று பெயர். இதனை ‘‘அன்பின் அகனைந்திணை’’ என்று கூறினர்.

கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். பெருந்திணையென்பது பொருந்தாக்காமம். இவை இரண்டும் சிறந்தனவல்ல. கூடாவொழுக்கம் என்று கூடச் சொல்லிவிடலாம். இவற்றைப் பின்னே காணலாம்.

குறிஞ்சித்திணைப் பாடல்களிலே மலைநிலத்து மக்களின் பழக்கவழக்கங்கள், மலைக்காட்சிகள்; மலைவளங்கள்; மலைநிலத்து மக்களின் அன்றாட நடவடிக்கைகள் ஆகியவைகளை அறியலாம்.

பாலைத்திணைப் பாடல்களிலே பாலைநிலத்து மக்களின் வாழ்க்கை; அந்த நிலத்தின் தோற்றம்; அங்குள்ள விலங்குகள், பறவைகள் படும் பாடு; அவ்வழிச் செல்வோர் அடையும் அல்லல் ஆகியவைகளை அறியலாம்.

முல்லைத்திணைப் பாடல்களிலே முல்லை நிலமக்களின் வாழ்க்கை முறைகள்; காடுகளின் காட்சி; அவைகள் தரும் செல்வம்; கார்காலத்தின் இயற்கை ஆகியவைகளைக் காணலம்.

நெய்தல் திணைப் பாடல்களிலே நெய்தல் நிலமக்களின் வாழ்க்கை; கடற்காட்சி; கடற்கரையின் இயற்கைத் தோற்றம்; கடலாற் கிடைக்கும் வளங்கள் ஆகியவைகளைக் காணலம்.

மருதத்திணைப் பாடல்களிலே உழவர்களின் வாழ்க்கை முறைகள்; பலவகைப்பட்ட வகுப்பினர்கள் செய்து வந்த