பக்கம் எண் :

92எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘நல்லநாள்; குளிர்ந்த பந்தல்; பந்தலிலே புதுமணல் பரப்பப்பட்டிருந்தது பூமாலைகள் புனைந்து தொங்கிக் கொண்டிருந்தன; இரவு கழிந்தது; காலை நேரம் வந்தது; கல்யாணப் பந்தரிலே வரிசை வரிசையாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

வயதேறிய நல்ல பெண்கள் தம் தலையிலே தண்ணீர்க் குடத்தை ஏந்தி நின்றனர். அந்த நீர்க்குடங்களை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிக் கொடுத்தனர். பிள்ளை பெற்ற நான்கு மாதர்கள் அந்த நீர்க் குடங்களை வாங்கி மணமகளை நீராட்டினர். நீராட்டும்போது ‘‘இவள் கற்புதவறாமல் கணவனுடைய அன்புக்குரியவளாய் ஆகுக’’ என வாழ்த்தினார்.

பின்னர், பெற்றோர் மணமகளை வாழ்த்தி, மணமகனிடம் கொடுத்தனர். அதன்பின் சுற்றத்தார் விருந்துண்டு மகிழ்ந்தனர்.

திருமணத்தன்றே கணவனும் மனைவியும் தனித்திருந்து வாழ்க்கை நடத்தினர்’’.

இதுவே அகநானூற்றின் 86-வது பாடலிலே கூறப்பட்டிருக்கும் திருமண முறை 136-வது பாடலிலும் இதே கருத்துதான் காணப்படுகின்றது.

ஆரம்பகாலத் திருமணச் சடங்கிலே புரோகிதம் இல்லை: மந்திரம் இல்லை: அக்கினி வளர்ப்பும் இல்லை: தாலி கட்டப்பட்டதாகவும் தெரியவில்லை. மாதர்களே முன்னின்று மணவினைகளை நடத்தி வைத்தனர்.

பிற்காலத்தில் தாலிகட்டும் வழக்கம் உண்டாயிற்று. புலிப்பல்லைத் தாலியாகக் கட்டினர். அகநானூற்றிலே இதைக் காணலாம். இதன் பின் வேத விதிப்படி மணம் செய்யும் வழக்கமும் ஏற்பட்டது. கடைச்சங்க காலத்திற்கு முன்பே வேத