பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்93

விதிப்படி மணம் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் தோன்றிவிட்டது. கலித்தொகையிலே இதைக் காணலாம்.

பிற்காலத்தில் வேத முறைத் திருமணமே பெருவழக்காயிற்று. இதனைச் சிலப்பதிகாரத்தால் அறிகின்றோம். கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த மணம் வேதமுறை மணம்; காதல் மணம் அன்று; பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படி-தஙகள் செல்வ நிலைமைக்கு ஏற்றபடி செய்து வைத்த திருமணம்.

தமிழர்களின் திருமணம், படிப்படியாக மாறுதல் அடைந்துவந்திருப்பதைப் பண்டை இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. முதலில், அநாகரிக காலத்தில், வரை துறையற்ற வாழ்க்கை; பின்னர் காதல் களவு மணம்; அதன்பின் கற்பு மணம்; பிறகு சடங்கு மணம்; பின்னர் தாலி மணம்; பின்னர் வேதமணம்; இவ்வாறு மாறிக்கொண்டே வந்திருக்கின்றது.

புத்திரப் பேறு

புத்திரன் என்பது வடமொழிச் சொல். புத் என்னும் நரகத்தை நீக்குகிறவன் என்று பொருள். இதே பொருளமைந்த சொல் தமிழில் இல்லை. பிள்ளை, பெண், மகன், மகள், மக்கள், சிறுவர், செல்வன், செல்வி, காதலன், காதலி, கான்முளை, வழித்தோன்றல் இவைகள் மக்களைக் குறிக்கும் சொற்கள். இச்சொற்களிலே புத்திரன் புத்திரி என்ற சொற்களில் உள்ள பொருள் இல்லை. புத்திரன் செய்யும் சடங்குகளால்தான் பிதிர்க்கள் இன்பமடைய முடியும் என்பது புராணக் கொள்கை. இக் கொள்கை பழங்காலச் சீன மக்களிடங் கூட இருந்ததாகச் சொல்லுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரிடமும் இக்கொள்கை பரவியிருந்தது. சங்க காலத்